/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்
/
ஐபோன் 15க்கு போட்டியாக அக்.,4ல் கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ரிலீஸ்!
/
ஐபோன் 15க்கு போட்டியாக அக்.,4ல் கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ரிலீஸ்!
ஐபோன் 15க்கு போட்டியாக அக்.,4ல் கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ரிலீஸ்!
ஐபோன் 15க்கு போட்டியாக அக்.,4ல் கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ரிலீஸ்!
UPDATED : செப் 29, 2023 01:43 PM
ADDED : செப் 29, 2023 01:42 PM

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியா உட்பட உலக நாடுகளில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் ப்ரீமியம் செக்மெண்டில் ஐபோன்களுக்கு போட்டியாக இதன் கூகுள் பிக்சல் சீரிஸ்கள் விற்பனையாகி வருகிறது. இந்த வரவேற்பை தொடர்ந்து, கூகுள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ்களுக்கு போட்டியாக அக்டோபர் 4-ம் தேதி பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
![]() |
முதலில் பிக்சல் 8 மாடலை பொறுத்தவரை, 6.7-இன்ச் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. அதுபோக, கூகுளின் பிரத்யேக டென்சர் ஜி3 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 7 வருடங்களுக்கான ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதோடு, 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 48எம்பி ஆட்டோபோகஸ் லென்ஸ் மற்றும் 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
செல்ஃபிக்களுக்கு 10.8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
![]() |
அதே சமயம், பிக்சல் 8 ப்ரோ மாடலை பொறுத்தவரை, ஸ்டோரேஜுக்கு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/1டிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5050 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இத்துடன் ஐபி68 ரேட்டிங் கொண்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.