sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

டெக்னாலஜி

/

ஸ்மார்ட்போன் & கேட்ஜெட்ஸ்

/

ஏசர் நைட்ரோ வி; கேமர்களுக்கான பிரத்யேக லேப்டாப்!

/

ஏசர் நைட்ரோ வி; கேமர்களுக்கான பிரத்யேக லேப்டாப்!

ஏசர் நைட்ரோ வி; கேமர்களுக்கான பிரத்யேக லேப்டாப்!

ஏசர் நைட்ரோ வி; கேமர்களுக்கான பிரத்யேக லேப்டாப்!


UPDATED : செப் 21, 2023 06:31 PM

ADDED : செப் 21, 2023 06:28 PM

Google News

UPDATED : செப் 21, 2023 06:31 PM ADDED : செப் 21, 2023 06:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏசர் நிறுவனம் நைட்ரோ வி (Acer Nitro V) எனும் கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக கேமிங் லேப்டாப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புகழ்பெற்ற ஹார்டுவேர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஏசர், டெஸ்க்டாப், லேப்டாப், டேப்லெட் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள், மற்றும் சேமிப்பக சாதனங்கள், உள்ளிட்ட ஏராளமான தயாரிப்புகளை உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் அதிவேக லேப்டாப் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. குறிப்பாக அதிகமான கேமிங் லேப்டாப் மாடல்கள் மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதன்படி, தற்போது ஏசர் நிறுவனம் மிட் ரேஞ்ச் விலையில் நைட்ரோ வி (Acer Nitro V) எனும் கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக கேமிங் கேமிங் லேப்டாப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Image 1172718


ஏசர் கம்ஃபிவியூ எல்இடி பேக்லிட் டிஃஎப்டி எல்டிசி (Acer ComfyView LED-backlit TFT LCD) மாடல் கொண்ட 15.6 இன்ச் ஃபுல்எச்டி (FHD) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது. இன்டெல் கோர் ஐ5-13420எச் (Intel Core i5-13420H) 64 பிட் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் மூலம் இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்க்கான என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 4050 (NVIDIA GeForce RTX 4050) கிராபிக்ஸ் ப்ராசஸசருடன் வருகிறது.

Image 1172717


இதில் 6 ஜிபி ஜிடிடிஆர்6 வீடியோ ரேம் (Video RAM) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என 2 வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும், மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 720p ரெசொலூஷன் கொண்ட டி-டைப் எச்டி கேமரா (T-Type HD) டெம்போரல் நாய்ஸ் ரெடக்சன் (Temporal Noise Reduction) சப்போர்ட் உடன் வருகிறது. இத்துடன் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), இன்டெல் வயர்லெஸ் வை-பை 6 ஏஎக்ஸ்201 (Intel Wireless Wi-Fi 6 AX201) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Image 1172719


மேலும், மேலும் கே - லாக் (K - lock) போர்ட் மற்றும் துல்லியமான டச்பேட் (Precision Touchpad), நைட்ரோ சென்ஸ் கீ (Nitro Sense Key) கொடுக்கப்பட்டுள்ளது. பேக்கப்பை பொறுத்தவரை, 57 Wh சப்போர்ட் கொண்ட லித்தியம் பேட்டரி மற்றும் 3 பின் 135W ஏசி அடாப்டர் கொண்ட சார்ஜிங் வசதி வழங்கபட்டுள்ளது. ஏசர் நைட்ரோ வி கேமிங் லேப்டாப்பின் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.72,999 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.79,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஷேல் பிளாக் (Shale Black) என்ற ஒற்றை கலரில் விற்பனைக்கு வருகிறது.






      Dinamalar
      Follow us