/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஷீல்டு பிரிப்பு வெற்றிகரமாக நடைபெறுமா?
/
நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஷீல்டு பிரிப்பு வெற்றிகரமாக நடைபெறுமா?
நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஷீல்டு பிரிப்பு வெற்றிகரமாக நடைபெறுமா?
நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் ஷீல்டு பிரிப்பு வெற்றிகரமாக நடைபெறுமா?
UPDATED : செப் 10, 2023 04:08 PM
ADDED : செப் 10, 2023 04:07 PM

அமெரிக்க விஞ்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த 2021 ஆம் ஆண்டு டிச.,25 ஆம் தேதி அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் ஏவியது. 9.7 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி மனிதனின் வியத்தகு கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது ஜேம்ஸ் தொலைநோக்கி சூரிய ஒளிக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுடன் இணைக்கப்பட்ட தெர்மல் கண்ட்ரோல் சிஸ்டம் நீக்கப்படும் பணி நடைபெறுகிறது. இதுகுறித்து அறிந்துகொள்வோம்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரிய ஒளியால் பாதிக்கப்படாமல் இருக்க ஷீல்டுகள் பொருத்தப்பட்டன. கேப்டான் மெம்ப்ரேனில் அலுமினியம் கோட் செய்யப்பட்ட ஐந்து ஷீல்டுகள் துணிபோல மெலியதாக இருக்கும். 69 × 46 அடி என்னும் அளவில் உள்ள இவை தொலைநோக்கிக்கு சூரியனில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்னதாக ராக்கெட் கொண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டுக்களில் இந்த ஷீல்டுகளை விரித்து வைத்து எடுத்துச் செல்லமுடியாது. எனவே இவை மடித்து எடுத்துச் செல்லப்பட்டன.
![]() |
இந்த ஷீல்டுகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சூரியனில் இருந்து பல ஆயிரம் கி.மீ., தூரம் செல்லும்வரை காத்து தங்களது பணியை நிறைவு செய்துவிட்டன. இந்நிலையில் தற்போது இந்த ஷீல்டுகளை தொலைநோக்கியில் இருந்து அகற்றும் பணி நடைபெறுகிறது. இந்த ஐந்து ஷீல்டுகளை தனித்தனியாகப் பிரித்து தொலைநோக்கியுடன் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் இந்த ஷீல்டுகள் பிரித்து எடுக்கப்பட்டு விண்ணில் விடப்படும்.
![]() |
இந்த ஷீல்டு பிரிக்கும் பணிக்கான முன் ஒத்திகை பூமியில் பலமுறை நடத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுவிட்டது. இந்த ஷீல்டுகள் கிழியாமல் பத்திரமாகப் பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டால்தான் தொலைநோக்கியால் தடையின்றி செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.