/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
நாசா போல இஸ்ரோ நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்பும்?
/
நாசா போல இஸ்ரோ நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்பும்?
நாசா போல இஸ்ரோ நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்பும்?
நாசா போல இஸ்ரோ நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்பும்?
UPDATED : ஆக 24, 2023 06:30 PM
ADDED : ஆக 24, 2023 03:22 PM

நேற்று சந்திரயான் 3 மிஷனில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரைத் தரையிறக்கிய முதல் நாடு என்கிற வரலாற்றுச் சிறப்பை இந்தியா பெற்றுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, அப்போலோ விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினரை நிலவுக்கு அனுப்பியதுபோல இந்திய விண்வெளிக் குழுவை இந்தியா எப்போது நிலவுக்கு அனுப்பும் என்கிற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. இதற்கு இஸ்ரோ தரப்பு கூறும் பதிலைப் பார்ப்போம்.
ககன்யான் ஒன்று மற்றும் இரண்டாவது மிஷனை இந்த ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய ராக்கெட் எம்விஎம்-3 செயல்திறனை பரிசோதிக்க இந்த மிஷன் உதவுகிறது. இதனையடுத்து பூமியின் கீழ் சுற்றுவட்டப் பாதைவரை மூன்று இந்திய வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு இஸ்ரோ நிலவுக்கு விண்வெளி வீரர் குழுவை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]() |
கடந்த ஆக., 17 ஆம் தேதி ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முயற்சியில் தோல்வி அடைந்து நிலவின் பரப்பின்மீது மோதி சிதிலமடைந்தது. இதேபோல ஜப்பானிய விண்கலமும் சேதமடைந்தது. சந்திராயன் 2 மிஷனில் ரோவர் சேதமடைந்ததை அடுத்து இஸ்ரோ பல பாடங்களைக் கற்றுக்கொண்டு சந்திரயான் 3 மிஷனில் விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்தி உள்ளது.
நிலவின் தென்பகுதியில் தண்ணீர் மாலிக்கியூல்கள் மற்றும் பனிப்படலம் இருப்பது கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவு சோதனையில் தெரியவந்தது. அதனாலேயே அதன் தென் துருவத்துக்கு இஸ்ரோ இத்தனை முக்கியத்துவம் அளிக்கிறது. தென் துருவத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் நேரில் சென்று இன்னும் பல சோதனைகளை செய்யும் காலம் விரைவில் வரும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் இஸ்ரோவின் சோதனைகள் மனிதகுலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.