/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
சாட் ஜிபிடி-யின் அபரிமித வளர்ச்சி; வாய்ப்பைத் தவறவிட்டாரா எலான் மஸ்க்?
/
சாட் ஜிபிடி-யின் அபரிமித வளர்ச்சி; வாய்ப்பைத் தவறவிட்டாரா எலான் மஸ்க்?
சாட் ஜிபிடி-யின் அபரிமித வளர்ச்சி; வாய்ப்பைத் தவறவிட்டாரா எலான் மஸ்க்?
சாட் ஜிபிடி-யின் அபரிமித வளர்ச்சி; வாய்ப்பைத் தவறவிட்டாரா எலான் மஸ்க்?
UPDATED : அக் 01, 2023 07:42 PM
ADDED : அக் 01, 2023 03:36 PM

அமெரிக்க தொழில் ஜாம்பவான் எலான் மஸ்க். உலகின் எந்த வசதியையும் தனது விரலசைவின் மூலம் தனதருகே வரவழைத்துக் கொள்ளும் சர்வவல்லமை பெற்றவர். அமெரிக்க எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு மையமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் எலான் மஸ்கால் வாங்கப்பட்ட சமூக வலைதளமான டிவிட்டர், அமெரிக்க சுரங்க நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் எலான் மஸ்கின் புகழைப் பறைசாற்றுபவை. ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் லாபத்தை அள்ளித்தரும் இந்த தொழில்துறைகள் மூலமாக உலகின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக இன்றளவும் வலம்வருகிறார் மஸ்க்.
எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்கள் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ஓட்டுநரின் கட்டுப்பாடின்றி தானாக இயங்க வைப்பதை தனது லட்சிய இலக்காகக் கொண்டுள்ளார். உலகின் எந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தாலும் முடியாத இந்த அரிய சாதனையை தனது நிறுவனமான டெஸ்லா படைக்கும் என உறுதியுடன் உள்ளார் மஸ்க். டெஸ்லா விஞ்ஞானிகள் இந்த தானியங்கித் தொழில்நுட்பம் குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் சென்சார் உதவியுடன் எதிரேவரும் வாகனங்களைக் கண்டறிந்து சாலையில் விபத்தின்றி பயணிக்கும் என்கிறார் மஸ்க்.
![]() |
சயின்ஸ் பிக்ஷன் கதைகளில் மட்டுமே நாம் கேட்கும் இதுபோன்ற கதைகளை உண்மையாக்க மஸ்க் முயன்று வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓப்பன் ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனம் வளர்ந்துவந்ததை அடுத்து, அதனால் அதிகம் கவரப்பட்டார் மஸ்க். 2018 ஆம் ஆண்டு டெஸ்லாவுடன் ஓப்பன் ஏஐ நிறுவனத்தை இணைக்க மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஓப்பன் ஏஐ நிறுவனர் ஆல்டன் இந்த ஒப்பந்தத்தை ஏற்காததால் இந்த கூட்டணி அப்போது கைவிடப்பட்டது.
![]() |
ஆனால் கடந்த சில மாதங்களாக ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்கிற செயற்கைத் தொழில்நுட்பம், கூகுள் நிறுவனத்துக்கே போட்டியாக வளர்ந்தது. ஓப்பன் ஏஐயின் இந்த குறுகியகால வளர்ச்சியை மஸ்க் 2018 ஆம் ஆண்டு கணித்திருக்கவில்லை. ஆனால் இன்று அதன் வளர்ச்சியைக் கண்டு வியப்புக்குள்ளாகியுள்ளார் மஸ்க். ஓப்பன் ஏஐ எதிர்காலத்தில் டெஸ்லாவுடன் இணைந்தால் மஸ்கின் தானியங்கிக் கார் கனவு நனவாகும் என ஏஐ விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.