/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
உலகத் தலைவர்களைக் கவரும் ரோபோக்கள்; எதிர்காலத்தில் ரோபோ தலைமைச் செயலாளர்கள் உருவாவார்களா?

UPDATED : அக் 01, 2023 06:11 PM
ADDED : அக் 01, 2023 06:07 PM

முன்னதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அறிவியல் நகருக்குச் சென்று அங்குள்ள ரோபோக்களை ஆர்வத்துடன் பார்வையிட்டார். ரோபோ கேலரியில் உள்ள டிஆர்டிஓ ரோபோக்கள் மற்றும் மைக்ரோபோட்கள் குறித்து பிரதமர் விசாரித்தார். விவசாயம், மருத்துவம், விண்வெளி என பல்வேறு துறைகளில் பல்வேறு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து நிபுணர்களிடம் கேட்டறிந்தார். ரோபோ கேலரியில் உள்ள உணவகத்துக்குச் சென்ற மோடிக்கு அங்கிருந்த ரோபோக்களால் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதேபோல முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவரது ஆட்சி காலத்தில் உலகின் நவீன ஹியூமனாய்டு ரோபோவாகத் திகழ்ந்த ஜப்பானின் அசிமோ ரோபோவுடன் கால்பந்து விளையாடினார். உலகின் பல நாட்டுத் தலைவர்கள், வெளியுறவுச் செயலாளர்கள் பலர் இதுபோல ரோபோக்களுடன் கலந்துரையாடுவது கடந்த ஐந்து தசாப்தங்களில் ரோபோ தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியை எடுத்துரைக்கிறது.
![]() |
ரோபோக்கள் எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்கள், மாநில முதல்வர்களின் நம்பிக்கைக்குரிய பணியாளாக அரசியலில் பங்காற்றும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் கணிதத் திறமை, சாதுர்யம், ஆற்றல், உழைப்பு உள்ளிட்டவற்றால் கவரப்படும் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் பலர் ஹியூமனாய்டு ரோபோ ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்குகின்றனர்.
![]() |