/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
அமெரிக்க சாட்டிலைட்டை ஹேக் செய்தால் 50 ஆயிரம் டாலர் பரிசு..!
/
அமெரிக்க சாட்டிலைட்டை ஹேக் செய்தால் 50 ஆயிரம் டாலர் பரிசு..!
அமெரிக்க சாட்டிலைட்டை ஹேக் செய்தால் 50 ஆயிரம் டாலர் பரிசு..!
அமெரிக்க சாட்டிலைட்டை ஹேக் செய்தால் 50 ஆயிரம் டாலர் பரிசு..!
UPDATED : ஆக 13, 2023 06:00 PM
ADDED : ஆக 13, 2023 05:56 PM

அமெரிக்க செயற்கைகோளை ஹேக்கிங் செய்து தகவல்களை திருடுவோருக்கு 50 ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படுமென அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நெவாடா அடுத்த லாஸ் வேகாசில், அமெரிக்க விமானப்படை சார்பில் ஏரோஃபேஸ் கிராமத்தில் 'ஹேக் ஏ சாட்-4' போட்டி இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 4வது ஆண்டாக நடைபெறும் போட்டிக்கு, கடந்த பிப்ரவரியில் இதற்கான முன்பதிவு துவங்கியது. விர்ச்சுவல் முறையில், ஏப்ரல் 1,2ல் அணிகள் தேர்வு நடந்தது. இதில்
வேகம் மற்றும் துல்லியம் அடிப்படையில் அணிகளுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு இறுதிச்சுற்றுக்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
![]() |
ஹேக்கர்கள் மூன்லைட்டர் செயற்கைக்கோளை உடைத்து அதன் தகவல்களை பெற முயற்சிக்கும் வேளையில், மற்ற அணிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக 50 ஆயிரம் டாலர்களும், 2வது பரிசாக 30 ஆயிரம் டாலர்களும், 3வது பரிசாக 20 ஆயிரம் டாலர்களும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், ஹேக்கர் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைத்து, விண்வெளி தொடர்பான சைபர் பாதுகாப்பில் சவால்களை எதிர்கொள்ளவும், அதற்கேற்ப எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் திறமையான நபர்களை ஆக்கப்பூர்வமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்களென கணினி விஞ்ஞானியான ஸ்டீவ் கொலென்சோ தெரிவித்தார்.