/
ஸ்பெஷல்
/
டெக்னாலஜி
/
வருங்கால தொழில்நுட்பம்
/
'ஏ.ஐ.,தொழில்நுட்பத்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்'
/
'ஏ.ஐ.,தொழில்நுட்பத்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்'
'ஏ.ஐ.,தொழில்நுட்பத்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்'
'ஏ.ஐ.,தொழில்நுட்பத்தால் தொழிலாளர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும்'
UPDATED : அக் 03, 2023 04:50 PM
ADDED : அக் 03, 2023 04:22 PM

'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சில வேலை இழப்புகள் இருந்தாலும், வரும் தலைமுறையினர் 100 வயது வரை வாழ்வார்கள்' என ஜே.பி மோர்கன் சேஸ் & கோவின் சி.இ.ஓ ஜேமி டைமன் கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதி நிறுவனமான ஜே.பி மோர்கன் சேஸ், கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் 3,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப இருப்பதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது. இதனிடையே, தனது பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 'அனைத்து பணியிடங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு நிரப்ப இருப்பதாகவும், 300க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் இதில் அடங்கும். இது காலத்தின் தேவை' என குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பாக லண்டனில் ஜே.பி.,மோர்கன் சேஸின் சி.இ.ஓ.,வும், வங்கியாளருமான ஜேமி டைமன் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், எங்கள் நிறுவனத்தின் எதிர்கால வெற்றிக்கு முக்கியமானது. புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், வாடிக்கையாளர் ஈடுபாட்டை
அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் மற்றும் இடர் மேலாண்மையை மேம்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம்.
![]() |
ஏ.ஐ தொழில்நுட்பம் சில வேலைகளை மாற்றியமைக்கலாம். ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் எப்போதும் அப்படித்தான் இருக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக உங்கள் குழந்தைகள், புற்றுநோய் இன்றி, 100 வயது வரை வாழப்போகிறார்கள். உண்மையில் வாரத்தில் மூன்றரை நாட்கள் மட்டுமே அவர்கள் வேலை செய்ய போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.