/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
'சச்சின் பேச்சால் சாதித்து காட்டினோம்' : நினைவு கூர்ந்த யுவ்ராஜ்சிங்..!
/
'சச்சின் பேச்சால் சாதித்து காட்டினோம்' : நினைவு கூர்ந்த யுவ்ராஜ்சிங்..!
'சச்சின் பேச்சால் சாதித்து காட்டினோம்' : நினைவு கூர்ந்த யுவ்ராஜ்சிங்..!
'சச்சின் பேச்சால் சாதித்து காட்டினோம்' : நினைவு கூர்ந்த யுவ்ராஜ்சிங்..!
UPDATED : அக் 01, 2023 07:55 PM
ADDED : அக் 01, 2023 07:51 PM

2011 உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் பேச்சை கேட்டு, விளையாட்டில் கவனம் செலுத்தியதால் சாதிக்க முடிந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், நாக்பூரில் நடந்த போட்டியில், குரூப் - பி பிரிவு போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியிடம், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர், மும்பையில் நடந்த பைனலில், இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி, 2வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. தொடர் நாயகன் விருதை யுவ்ராஜ் சிங் வென்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்
சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
2011ல் இப்போது இருப்பது போன்று சமூக வலைதளங்கள் இல்லாததால் கவனச்சிதறல்
அதிகமாக இல்லை. இருப்பினும், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் கவனச்சிதறல்
இருந்தது. நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த முயற்சித்தோம். உலகக்
கோப்பையில், நாங்கள் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றோம். வெற்றி பெற வேண்டிய
ஆட்டத்தில் தோற்றது ஊடகங்களில் பேசுபொருளாக பற்றி எரிந்தது.
![]() |
அப்போது சச்சின் அணியினருடன் அமர்ந்து, 'நாம் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த
வேண்டும்.பேப்பர் படிப்பதை நிறுத்த வேண்டும். விமான நிலையங்களில் கூட்ட நெரிசலில் செல்லும்போது ஹெட்போனை பயன்படுத்த வேண்டும். உலகக் கோப்பையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.' என்றார். அணி வீரர்கள் அனைவரும் ஒப்புகொண்டோம். அதைப் பின்பற்றினோம். அது உண்மையில் வேலை செய்தது.
நடப்பு உலக கோப்பை தொடரிலும் அதிக அழுத்தம் இருக்கிறது. இந்தியாவின் பிரச்சனை
என்னவென்றால், இந்திய அணி மட்டுமே வெற்றி பெறும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது உலகக் கோப்பை, பல நல்ல அணிகள் உள்ளன. நாம் கையில் உள்ள பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.