/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
டிடிஎப் வாசனுக்கான தடை: வெற்று சாகசம் செய்வோருக்கு பாடம்...!
/
டிடிஎப் வாசனுக்கான தடை: வெற்று சாகசம் செய்வோருக்கு பாடம்...!
டிடிஎப் வாசனுக்கான தடை: வெற்று சாகசம் செய்வோருக்கு பாடம்...!
டிடிஎப் வாசனுக்கான தடை: வெற்று சாகசம் செய்வோருக்கு பாடம்...!
UPDATED : அக் 07, 2023 04:22 PM
ADDED : அக் 07, 2023 01:16 PM

பிரபல யூடியூபர் டிடிஎப் கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னையில் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் சென்ற போது சாகசத்தில் ஈடுபட்டு விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு கை எழும்பு முறிவு எற்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக காஞ்சிபுரம் போலீசார் அவரை கைது செய்து ஜாமீனில் வெளிவரமுடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். இதைத்தொடர்ந்து, தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், இதனால் புண்கள் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும், வெளியில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், இதற்காக நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதாக கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்காக ஜாமீன் வழங்க முடியாது என்றும், ஜாமீன் வேண்டும் என்றால் பைக்கை எரித்து விட்டு மற்றும் சேனலை முடக்கி விட்டு வரவேண்டும் எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுப்படி செய்தது. இது டிடிஎப் வாசனை பின்தொடரும் லட்சகணக்கான இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி உத்தரவு அடங்குவதற்கு டிடிஎப் வாசன் மற்றும் அவரை பின்தொடரும் இளைஞர்களுக்கு மற்றொரு இடியாக டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் ரத்து செய்து உத்தரவிட்டார்.
எந்தவித கட்டுபாடுகளும் இல்லாமல் யூடியூப் சேனல்களை தொடங்கி சாகாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து, இளைஞர்கள் கவரும் டிடிஎப் வாசன் போன்றோரை லட்சகணக்கான இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். வீடியோ போடும் டிடிஎப் வாசன் போன்றோர் லட்சகணக்கில் அந்த வீடியோக்கள் மூலம் சம்பாதித்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்து சாகசம் செய்து வருவதால், அதே போன்று தாங்களும் செய்ய வேண்டும் என பெற்றோர்களை வற்புறுத்துகின்றனர்.
ஒரிரு இளைஞர்கள் இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்டு உயிரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. யூடியூப்பில் இதுபோன்று வீடியோக்களை பதிவேற்றும் சேனல்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற சேனல்கள் மற்றும் வீடியோகளுக்கு கடிவாளம் போடாமல் இருக்கும் யூடியூப் நிர்வாகத்தின் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.