/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
ரூ. 50 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய நயன்தாரா !
/
ரூ. 50 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கிய நயன்தாரா !
UPDATED : செப் 28, 2023 04:57 PM
ADDED : செப் 28, 2023 01:22 PM

ஜவான் பட வெற்றியை தொடர்ந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் புதிதாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் புகழ்பெற்று விளங்குகிறார். தென்னிந்தியா மட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால்தடம் பதித்துள்ளார். அதாவது, அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதன்மூலம் இந்தியா முழுவதும் முன்னிலை நடிகையாக தற்போது நயன்தாரா வலம் வருகிறார்.
![]() |
அடுத்ததாக பாட்டு, லேடி சூப்பர் ஸ்டார் 75, தி டெஸ்ட், இறைவன், டியர் ஸ்டூடண்ட்ஸ் மற்றும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சொந்தமாக ஸ்கின் கேர், மற்றும்லிப் பாம் (Lip Balm) நிறுவனங்களையும் நயன்தாரா நடத்தி வருகிறார். இதுதவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எண்ணெய் வணிகத்தில் ரூ. 100 கோடியும் சாய் வாலே (Chai wale) பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார்.
சரி விஷயத்துக்கு வருவோம்.....
பொதுவாக, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் முக்கியமான பிரபலங்களே விலை உயர்ந்த சொகுசு கார்களை தொடர்ந்து சொகுசு வசதிகளுடன் கூடிய பிரைவேட் ஜெட்டை சொந்தமாக வாங்கியுள்ளனர். அந்த வகையில், பாலிவுட்டில் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, பிரியங்கா சோப்ரா மற்றும் மாதுரி தீக்ஷிட் உள்ளிட்டோர் பிரைவேட் ஜெட் வைத்துள்ளனர். தற்போது இந்த வரிசையில் தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முதலாக நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]() |
இந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ. 50 கோடியாம்... முற்றிலும் சொகுசு வசதிகள் நிறைந்த பிரைவேட் ஜெட்டில் மசாஜ் செய்யக்கூடிய லக்சூரி சீட்கள், கழிவரை, கூடுதல் இருக்கைகள் என எக்கசக்க வசதிகள் நிறைந்துள்ளதாம். கிட்டத்தட்ட சொகுசு வசதிகள் நிறைந்த பறக்கும் கேரவன் போல இந்த ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் உள்ளது.
![]() |
இதுதவிர நயன்தாராவிடம், எக்கசக்க சொகுசு கார்களும் உள்ளதாம். அதன்படி, ரூ. 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ரூ.88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடீஸ் ஜிஎல்எஸ், ரூ.74.50 மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஃபோர்டு எண்டேவர், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட கார்களும் உள்ளது.