/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
கல்வி என்றால் ஒரு மண்ணும் கிடையாதா? தொடரும் விவாதத்தை கிளப்பிய பிக் பாஸ் ஷோ!
/
கல்வி என்றால் ஒரு மண்ணும் கிடையாதா? தொடரும் விவாதத்தை கிளப்பிய பிக் பாஸ் ஷோ!
கல்வி என்றால் ஒரு மண்ணும் கிடையாதா? தொடரும் விவாதத்தை கிளப்பிய பிக் பாஸ் ஷோ!
கல்வி என்றால் ஒரு மண்ணும் கிடையாதா? தொடரும் விவாதத்தை கிளப்பிய பிக் பாஸ் ஷோ!
UPDATED : அக் 08, 2023 03:35 PM
ADDED : அக் 08, 2023 03:30 PM
கமல் நடுவராக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா, “அடிப்படை கல்வியறிவு முக்கியம்” என்று கூறியதற்கு “கல்வியறிவு ஒருவருக்கு முக்கியமில்லை, கல்வி என்றால் ஒரு மண்ணும் கிடையாது” என்று வனிதாவின் மகள் ஜோவிகாவும், எழுத்தாளர் பவா செல்லதுரையும் சொல்ல, கமல் இக்கருத்து மோதலுக்கு தனது கட்சிக் கொள்கையைப் போல் மையமாக பேசிவிட்டுச் சென்றார். இச்சம்பவங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.
பிக் பாஸின் 7வது சீசன் தற்போது துவங்கி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனிலும் வழக்கம் போல நடிகர், நடிகைகள், சின்னத்திரையைச் சேர்ந்தவர்கள், சமூக வலைதள பிரபலங்கள், எழுத்தாளர் என 19 பேர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இம்முறை பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என பிரித்துள்ளனர். அவரவர்களுக்கான வீட்டு பராமரிப்பு டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, அதில் பிரச்னைகள் எட்டிப் பார்க்க துவங்கியுள்ளன.
![]() |
கடந்த வாரத்தில் வனிதாவின் மகளிடம் நடிகை விசித்ரா பள்ளிக் கல்வியை நீ முடித்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் அது குறித்து டாஸ்க் ஒன்றில் விவாதம் வெடித்தது. விசித்ரா அப்போது, “எல்லோருக்கு கல்வி முக்கியம். 10வது வரை படிக்கவே பலர் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறார்கள். நம் வீட்டில் நம்மை படிக்க வைக்க தயாராக இருக்கும் போது, படிக்கவில்லை என்றால் அப்புறமென்ன...அடிப்படை கல்வியறிவு முக்கியம். குறைந்தபட்சம் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டும். படித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் நிரூபியுங்கள்.”
அதற்கு பதிலளித்த ஜோவிகா “கல்வி முக்கியம் தான், அதே சமயம் நீட் போன்றவற்றால் எத்தனைப் பேர் சாகிறார்கள். அப்படி கல்விக்காக சாக முடியாது. எல்லோரும் டாக்டரானால் யார் கம்பவுன்டர் ஆவது. என்னால் படிக்க முடியவில்லை அதனால் விட்டுவிட்டேன். எனக்கு மற்ற திறன்கள் உள்ளது.” என்றார்.
![]() |
இடையே புகுந்த எழுத்தாளர் பவா செல்லதுரை, “நான் எல்லா ஊருக்கும் சென்று கல்வி இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லி வருகிறேன். காமராஜர் ஆரம்பித்து கமல் சார் வரை இவங்க யாருமே முதுகலை பட்டதாரிகள் கிடையாது.” என்று கூறினார்.
இந்த விவாதம் சமூக வலைதளங்களிலும் எதிரொலித்தது. விசித்ராவின் கருத்தை பலரும் ஆதரித்திருந்தனர். படிக்காமல் முன்னேறிய 10 பேரைக் காட்டினால், படித்து வாழ்க்கையில் முன்னேறிய லட்சம் பேரைக் காட்ட முடியும் என கோபிநாத் பேசிய வீடியாவை பலர் பகிர்ந்துள்ளார்கள். கல்வியறிவுடன் கூடிய அனுபவ அறிவு தான் வாழ்க்கையில் ஒவ்வொரு படி நிலையிலும் உதவக்கூடிய கருவி என ஒரு பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் பவா செல்லதுரைக்கு கல்வியின் முக்கியத்துவத்தை ஆனித்தரமாக பேசும் பொறுப்பு உண்டு. ஆனால் அவர் கல்வி என்றால் ஒரு மண்ணும் இல்லை என பொதுமைப்படுத்துவது அபத்தம் என சிலர் விமர்சித்திருக்கிறார்கள்.
இப்போது தான் நம்மூரில் இரண்டாவது தலைமுறை கல்லூரிக்குள் போகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் மாணவரை திசைத்திருப்பக் கூடும் என ஒரு வருத்தப்பட்டுள்ளார். ஜோவிகா எட்டாவது உடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் இப்போதே சம்பாதிக்கத் துவங்கிவிட்டார். அதனால் மீடியாவைப் பார்த்து மனக்கோட்டைக் கட்டாமல் பிழைப்பைப் பாருங்கள் என பெண் ஒருவர் குறிபிட்டுள்ளார்.
நேற்று (செப்., 07) இவ்விஷயம் தொடர்பாக பேசிய கமல், நெத்தியடியாக ஒரு பதிலைச் சொல்லாமல், கற்றல் விதி இருக்கலாம். கற்றல் வதை இருக்கக்கூடாது. நீங்கள் சொன்னது உங்கள் நியாயம். அவர் சொன்னது அவருக்கான நியாயம் என மையமாக பேசிவிட்டுச் சென்றார். வாசகர்களே நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.