/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
கடப்பாரை எடுத்துக் கொண்டு மெரினா செல்லுங்கள்: சீமானின் சீண்டல் பேச்சு
/
கடப்பாரை எடுத்துக் கொண்டு மெரினா செல்லுங்கள்: சீமானின் சீண்டல் பேச்சு
கடப்பாரை எடுத்துக் கொண்டு மெரினா செல்லுங்கள்: சீமானின் சீண்டல் பேச்சு
கடப்பாரை எடுத்துக் கொண்டு மெரினா செல்லுங்கள்: சீமானின் சீண்டல் பேச்சு
UPDATED : செப் 30, 2023 09:08 PM
ADDED : செப் 30, 2023 09:02 PM

ஆவேசமாக மேடையில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள சீமான், வேதாரண்யத்தில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில், “நான் ஆட்சிக்கு வந்து உட்கார்ந்ததும் கடப்பாரை, கோடாரி எடுத்து வந்து மெரினாவில் உள்ள சமாதிகளை புரட்டி தூக்கிப் போட்டு போய்கிட்டே இரு” என்று பேசியுள்ளார். சீமானின் பேச்சு தி.மு.க., அ.தி.மு.க.,வினரை கொதிப்படைய வைத்துள்ளது.
சீமான் தலைமையில் வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சி தாயே கடல் தாயே என்ற தலைப்பில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்று பேசிய சீமான் தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். காவிரி விவகாரம், கச்சத் தீவு விவகாரம், மீனவர் பிரச்னை, ஓரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றை எல்லாம் விமர்சித்தார். குறிப்பாக அதில் மெரினாவில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., தலைவர்களின் சமாதிகளை கொச்சப்படுத்தும் வகையில் பேசிய வீடியோ துணுக்குகள் சமூக வலைதளத்தில் தற்போது பரவி வருகிறது.
![]() |
சீமான் பேசியதாவது: கடல் என்னுடைய தாய், கடற்கரை என்னுடைய சொத்து. அது எப்படி தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் கல்லறை ஆனது. ஒவ்வொருத்தனும் இரண்டு இரண்டு ஏக்கரில் படுத்திருக்கான். யார் நீ, என்ன புடுங்கின நீ, மீனவர்களுக்காக போராடிய சிங்கார வேலருக்கு எங்கே சமாதி இருக்கிறது. காமராஜருக்கு ஏன் கடற்கரையில் இடம் தரவில்லை. கக்கனுக்கு ஏன் தரவில்லை. வ.உ.சி.,க்கு ஏன் தரவில்லை.
![]() |
சீக்கிரம் அண்ணன் வந்து உட்கார்ந்த பிறகு நீ என்னை கேட்கக் கூடாது. கடப்பாரை, மண்வெட்டி, கோடாரி எடுத்துட்டு வந்து அந்த சமாதியை புரட்டி தூக்கிப் போட்டுட்டு போ. அண்ணன் அரசு அமைதியாக இருக்கும். உள்ளே எலும்பு இருந்தால் எடுத்து கொண்டு போய் வேறு எங்காவது புதைத்துக்கொள். இவ்வாறு பேசியுள்ளார்.
![]() |
இதற்கு தி.மு.க., அ.தி.மு.க.,வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இது வன்முறைப்பேச்சு. சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்கும்” என ஒருவர் கூறியுள்ளார். “முதலில் எம்.எல்.ஏ., சீட்டுக்களை ஜெயிக்கப் பாருங்கள் பிறகு ஆட்சியில் உட்காருவதா படுப்பதா என்பது பற்றி யோசிக்கலாம்” என மற்றொரு நபர் தெரிவித்துள்ளார். “ஆட்சியில் உட்கார எல்லாம் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..” என்று சீமான் வசனத்தையே அவருக்கு பதிலடியாக ஒருவர் தந்துள்ளார். மேலும் பலர் சீமானுக்கு ஆபாச அர்ச்சனை செய்துள்ளனர். சீமான் மீது வழக்கு தொடுக்க வேண்டும், கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறியுள்ளனர்.