/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
உடுப்பியில் 380 அடி உயர கூசஹள்ளி நீர்வீழ்ச்சி
/
உடுப்பியில் 380 அடி உயர கூசஹள்ளி நீர்வீழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 06:20 AM

உடுப்பி மாவட்டத்தின் உடுப்பி - கார்வார் சாலையில் சிரூரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் கூசஹள்ளி கிராமம் அமைந்து உள்ளது. கிராமத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில், இந்த நீர்வீழ்ச்சி உள்ளது.
கிராமத்தில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு 5 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் வழியில் பல பாறைகளை கடக்க வேண்டியிருக்கும்.
எனவே, அதற்கான காலணிகளை அணிந்து கொள்ளவும். செல்லும் வழியில் இரண்டு மூன்று சிறிய நீரோடைகளை காணலாம்.
நீங்கள் செல்லும் வழித்தடம் ஒத்தையடி பாதையாக இருப்பதால், 5 கி.மீ., தொலைவை கடக்க உங்களுக்கு இரண்டு மணி நேரமாகும். வனப்பகுதிக்குள் மலையேற்றம் செய்வதில் விருப்பம் உள்ள சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடம்.
நகர வாழ்க்கையில் இருந்து விலகி அமைதியை தேட விரும்புவோர், கூசஹள்ளிக்கு செல்லலாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் நீர்வீழ்ச்சியை காண செல்வோர், பசுமை, மரங்கள் நிறைந்த இயற்கையை ரசிக்க முடியும். இங்கு இயற்கையாக உருவான குளங்கள் உள்ளன. கோடை காலத்தில், நீங்கள் இனிமையாக நேரத்தை போக்கலாம்.
நீர்வீழ்ச்சியை அடையும் போது, படிக்கட்டுகளில் தண்ணீர் விழுந்தால் எப்படி இருக்குமோ, அதுபோன்று, ஆறு நிலைகளில் இருந்து தண்ணீர் கொட்டும்.
முதல் மூன்று நிலைகள் சிறியதாகவும், அடுத்த இரண்டு நிலைகள் சற்று பெரிதாகவும் இருக்கும். ஐந்தாவது நிலையில், சிறிய குளம் போன்று உள்ளது. கடைசியாக ஆறாவது நிலை, 150 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதத்திலும்; குளிர் காலமான அக்டோபரில் இருந்து பிப்ரவரையிலும் இங்கு செல்வது சரியாக இருக்கும்.
உங்களை பாதுகாப்புடன் அழைத்து செல்ல வழிகாட்டிகளும் உள்ளனர். வழிகாட்டிகள் அனைவரும் அப்பகுதியை சேர்ந்தவர்களே. எனவே, அச்சப்பட தேவையில்லை.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், சிரூர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள கூசஹள்ளி கிராமத்துக்கு பஸ்சில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், சிரூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 63 கி.மீ., தொலைவில் உள்ள கூசஹள்ளி கிராமத்துக்கு மாற்று பஸ் அல்லது டாக்சியில் செல்லலாம்.
24_Article_0001 அல்லது 24_Article_0002 380 அடி உயரத்தில் இருந்து கொட்டும் கூசஹள்ளி நீர்வீழ்ச்சி.
- நமது நிருபர் -