/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
உடுப்பியில் முக்கிய கடற்கரைகள்
/
உடுப்பியில் முக்கிய கடற்கரைகள்
ADDED : ஆக 27, 2025 10:49 PM

க ர்நாடகாவில் உள்ள கடலோர மாவட்டங்க ளில் ஒன்று உடுப்பி மாவட்டம். சுற்றுலா பயணியரின் சொர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் இங்குள்ள கடற்கரைகளே. இந்த கட்டுரையில் உடுப்பில் உள்ள ௩ முக்கியமான கடற்கரைகளைப் பற்றி பார்க்கலாம்.
மல்பே கடற்கரை உடுப்பியின் மிகவும் பிரபலமான கடற்கரை மல்பே. இங்கு படகு சவாரி, ஸ்கூபா டைவிங், பாராசூட் விளையாட்டுகள் என அனைத்து நீர்விளையாட்டுகளும் உள்ளன. எனவே மல்பே கடற்கரை நீர் சார்ந்த விளையாட்டுகளின் மையமாக விளங்குகிறது. மல்பேவில் இருந்து படகில் சென்று அடையக்கூடிய செயின்ட் மேரிஸ் தீவு, உலகளவில் தனித்துவமான தீவுகளில் ஒன்றாகும். இது மட்டுமின்றி இங்கு சுவையான கடல் உணவுகள் கிடைக்கும்.
காபு கடற்கரை இந்த கடற்கரையில் உள்ள பழமையான லைட்ஹவுஸ் சுற்றுலா பயணியரை அதிகம் கவர்கிறது. இந்த லைட் ஹவுஸில் ஏறுவதற்கு அனுமதி உண்டு. லைட் ஹவுஸ் உச்சியில் சென்று பார்க்கும் போது, அரபிக்கடலின் பரந்த காட்சியை பார்க்க முடியும். ஆகவே இங்கே பல சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். புகைப்பட ஆர்வலர்களுக்கான சிறப்பான அனுபவமாகும்.
கோடி கடற்கரை இந்த கடற்கரை பிரபலமான கடற்கரையாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் கூட்டம் இன்றியே காணப்படும். தனிமை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமான கடற்கரை.
அமைதியான சூழல், கூட்ட நெரிசல் இன்றி இயற்கையுடன் நேரம் கழிக்க விரும்புவோருக்கான சிறந்த இடம்.
புதிய கடல் உணவுகளையும் சூரிய அஸ்தமன காட்சியையும் ரசிக்க இங்கு சுற்றுலாப் பயணியர் பெருமளவில் வருகின்றனர்.
- நமது நிருபர் -