/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ராகு தோஷம் போக்கும் துர்கா பரமேஸ்வரி தேவி
/
ராகு தோஷம் போக்கும் துர்கா பரமேஸ்வரி தேவி
ADDED : ஆக 05, 2025 06:59 AM

உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகா உப்புண்டா டவுனில் உள்ளது ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில். இங்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். துர்க்கா பரமேஸ்வரி தேவி சிங்கத்தின் மீது அமர்ந்து, தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
8ம் நுாற்றாண்டு இந்த கோவில் கி.பி., 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது. ஸ்கந்த புராணத்தில், மதங்க முனிவர் இங்கு வந்து துர்கா தேவியை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. மற்ற நாட்களை விட, வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
கோவில் வளாகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலில் கோசாலை உள்ளது. இந்த கோவிலின் பக்கவாட்டில் ஓடும் நந்தினி நதி, கோவிலுக்கு மேலும் அழகூட்டுகிறது. இங்கு விநாயகர், சிவ பெருமானுக்கு தனி சன்னிதிகள் உள்ளன.
மங்களாரத்தி தேவிக்கு காலை நேரத்தில் நடக்கும் மஹா மங்களாரத்தியை காண்பது சிறப்பு. துலாபாரம் சேவை பிரசித்தி பெற்றது. துலாபாரம் செய்வதாக வேண்டும் பக்தர்களின் நேர்த்திக்கடன் நிச்சயம் நிறைவேறும்.
இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ரத உத்சவம் நடக்கும். இதுவே, இந்த கோவிலின் சிறந்த விழாக்களில் ஒன்றாகும். துர்கா தேவியை வழிபட்டால் 'ராகு தோஷம் நீங்கும்' என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவில் தினமும் காலை 7:00 மணி -முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 5:30 மணி முதல்- இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.
- நமது நிருபர் -