தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ கடும் வறட்சிக்கு மத்தியிலும் ஜோகிமட்டியில் குளுகுளு

 கடும் வறட்சிக்கு மத்தியிலும் ஜோகிமட்டியில் குளுகுளு

 கடும் வறட்சிக்கு மத்தியிலும் ஜோகிமட்டியில் குளுகுளு


ADDED : ஜூலை 22, 2026 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 11:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சித்ரதுர்கா மாவட்டத்தில் வறட்சி தீவிரமாக உள்ளது என்றாலும், ஜோகிமட்டி மலைப் பகுதியில் பனிப்பொழிவு, குளிர்ச்சியான காற்று, பசுமையான சூழ்நிலை நிலவுகிறது. சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.

சித்ரதுர்கா மாவட்டம், கோட்டை மாவட்டம், வெயில் மாவட்டம் என, பெயர் பெற்றது. நடப்பாண்டும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் பரவலாக வறட்சி சூழ்ந்துள்ளது. ஆனால் இங்குள்ள ஜோகிமட்டி மலையில், இதற்கு எதிர் மறையான சூழ்நிலை உள்ளது.

3,803 அடி உயரம் கடல் மட்டத்தில் இருந்து, 3,803 அடி உயரத்தில் ஜோகிமட்டி உள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகமான காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜோகிமட்டியை 20,000 ஏக்கர் வனப்பகுதி சூழ்ந்துள்ளது. இங்கு அபூர்வமான உயிரினங்கள் வாழ்கின்றன.

கண்களுக்கு இனிமையான பசுமை காட்சிகள், உடலை இதமாக வருடி செல்லும் குளிர் காற்று, பனிப்பொழிவு என, அற்புதமான சூழ்நிலை தென்படுகிறது. இதை அனுபவிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.

இங்கு வன விலங்குகள் சரணாலயமும் உள்ளது. மழைக்காலத்தில் ஜோகிமட்டிக்கு வருவது, புதிய அனுபவத்தை அளிக்கும்.

இதமான தென்றல் கர்நாடக மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் ஜோகிமட்டிக்கு வருகின்றனர். செல்பி, வீடியோ எடுத்து கொண்டு, தென்றல் காற்றை அனுபவித்தபடி, இயற்கையின் மடியில் தவழ்ந்து பொழுது போக்குகின்றனர்.

சித்ரதுர்கா மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வெப்பமான சூழ்நிலை இருந்தாலும், ஜோகிமட்டியில் மட்டும் குளிர்ச்சி, பனிமூட்டமான சூழ்நிலை இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக சுற்றுலா பயணியர் கூறுகின்றனர்.

பார்வை நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை.

தொலைபேசி: 08194 - 230402, 94498 63633

அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: சந்திரவள்ளி குகைகள், சித்ரதுர்கா கோட்டை, ஆடுமல்லேஸ்வரா கோவில், மிருகக்காட்சி சாலை.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 201 கி.மீ., மங்களூரில் இருந்து 306 கி.மீ., மைசூரில் இருந்து 285 கி.மீ., தொலைவில் சித்ரதுர்கா உள்ளது. சித்ரதுர்கா நகரில் இருந்து, 12 கி.மீ., தொலைவில் ஜோகிமட்டி உள்ளது. மாநிலத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும், சித்ரதுர்காவுக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. பஸ்சிலோ, ரயிலிலோ வந்திறங்கினால் அங்கிருந்து வாடகை வாகனத்தில், ஜோகிமட்டிக்கு செல்லலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us