/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
மகிழம்பூ; மணக்கவும் செய்யும்...மருத்துவமும் செய்யும்!
/
மகிழம்பூ; மணக்கவும் செய்யும்...மருத்துவமும் செய்யும்!
மகிழம்பூ; மணக்கவும் செய்யும்...மருத்துவமும் செய்யும்!
மகிழம்பூ; மணக்கவும் செய்யும்...மருத்துவமும் செய்யும்!
UPDATED : செப் 30, 2023 07:44 PM
ADDED : செப் 30, 2023 07:42 PM

நறுமனத்திற்காக வீடு மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் மகிழம்பூவில் எக்கச்சக்க மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
மகிழம்பூ மற்றும் மகிழம்பூ விதைகளின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதது. இதன் அறிவியல் பெயர் மிமுசோப்ஸ் இலாங்கி (Mimusops Elengi) மகிழம்பூவிலிருந்து வாசனைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பசியின்மை முதல் மன அழுத்தம் வரை அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும்.
![]() |
மகிழ மரத்தின் பிஞ்சுகளை இரண்டு எடுத்து வாயில் மென்று அவற்றை துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
மகிழம் பூவை காயவைத்து பொடி செய்து அதனை மூக்கில் உறிஞ்சினால் தலையில் கோர்த்து கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலைபாரம் நீங்கும்.
மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை, மாலை அறிந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும்.
![]() |
மகிழம்பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்கு தடவி வந்தால் உங்களுக்கு பொடுகு, பேன் தொல்லை இருக்காது.
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டி பால் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்த்தால் மருந்து ரெடி. இதனை சாப்பிட்ட 48 மணி நேரத்தில், தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.