/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
இப்படிக் இருந்தால் உங்கள் ஆயுளை சற்று நீட்டிக்கலாம்; 'குடி' மக்களுக்கு மருத்துவர்கள் அட்வைஸ்..!
/
இப்படிக் இருந்தால் உங்கள் ஆயுளை சற்று நீட்டிக்கலாம்; 'குடி' மக்களுக்கு மருத்துவர்கள் அட்வைஸ்..!
இப்படிக் இருந்தால் உங்கள் ஆயுளை சற்று நீட்டிக்கலாம்; 'குடி' மக்களுக்கு மருத்துவர்கள் அட்வைஸ்..!
இப்படிக் இருந்தால் உங்கள் ஆயுளை சற்று நீட்டிக்கலாம்; 'குடி' மக்களுக்கு மருத்துவர்கள் அட்வைஸ்..!
UPDATED : அக் 05, 2023 02:17 PM
ADDED : அக் 05, 2023 02:15 PM

குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என எவ்வளவு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டாலும் மது குடிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரிய விஷயம். உலக சுகாதார நிறுவன அறிக்கைப்படி உலகம் முழுதும் ஆண்டுக்கு 30 லட்சம் நோயாளிகள் மதுப்பழக்கம் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பலனின்றி மரணம் அடைகின்றனர்.
பல்வேறு மது வகைகள், மது குடிக்கும் ஆசையைத் தூண்டுவதால் இவற்றைப் பலர் அதிகளவில் வாங்கிப் பருகி வருகின்றனர். செல்வந்தர்கள் வீட்டிலேயே பார் வைத்து தினமும் இரவு மது அருந்துகின்றனர். கூலி வேலை செய்யும் பாமர மக்கள் பலர் இரவு உறக்கம் வரவும் உடல் அசதியைப் போக்கவும் எனக் கூறி மதுவுக்கு அடிமையாகின்றனர். பூரண மது விலக்கு என்பது எட்டாக்கனியாக உள்ள நிலையில் மதுவுக்கு அடிமையானவர்களை குணப்படுத்த நம் நாட்டில் மறுவாழ்வு மையங்களும் அதிகரிக்கின்றன.
மது குடித்தே தீரவேண்டுமென்றால் இவர்கள் குடிக்க ஏற்ற பாதுகாப்பான அளவு என்று ஏதாவது இல்லையா எனக் கேட்டால் உண்டு என்கின்றனர் மருத்துவர்கள். இந்த அளவு குறித்து தெரிந்துகொள்வோம். வாரம் ஒருமுறை மது அருந்தும் ஆண்கள், 525 மில்லிலிட்டர் மது மட்டுமே அருந்த வேண்டும். அதேசமயம் பெண்கள் 350 மில்லிலிட்டர் மதுவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினசரி இரவு மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தினசரி 75 மில்லிலிட்டர் மது மட்டுமே அருந்த வேண்டும். அதாவது இருபது சொட்டு மது..! இவ்வாறு செய்தால் கல்லீரல் இழந்த செல்களை மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.
![]() |
ஆனால் மேற்கண்ட அளவுகள் எல்லாம் 'குடி' மக்களின் யானைப் பசிக்கு சோளப்பொறி போன்ற ஒரு மிகச்சிறிய அளவுகள்தான். இது தினசரி மது குடிப்பவர்களுக்கு நிச்சயம் போதாது. ஆனால் இந்த அளவுக்குமேல் தினமும் டிஸ்டில்டு ஸ்பிரிட் வயிற்றுக்குள் சென்றால், கல்லீரல் செயலிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் இவ்வாறு அளவுடன் மது அருந்தினால் மதுப்பழக்கம் அற்றவர்கள்போல ஆரோக்கியமாக வாழலாம் என கனவு காணவேண்டாம்..! அளவாக மது அருந்துபவர்களுக்கும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களது வயோதிகத்தில் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படலாம்.
மதுப்பழக்கம் அற்றவர்கள் திடீரென ஏதாவதொரு வாழ்க்கைப் பிரச்னைக்காக அதீத மது அருந்தினால் அவர்களுக்குப் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் சில, உயிரைப் பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.