தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/காலை உணவை தவிர்க்கும் பழக்கம் இருதயத்தை பாதிக்குமா?

காலை உணவை தவிர்க்கும் பழக்கம் இருதயத்தை பாதிக்குமா?

காலை உணவை தவிர்க்கும் பழக்கம் இருதயத்தை பாதிக்குமா?


UPDATED : அக் 04, 2026 02:37 PM

ADDED : அக் 03, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 02:37 PM ADDED : அக் 03, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை, காலையில் அவசரமாகக் கிளம்புவதால் பலரும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். சிலர் நேரமின்மை காரணமாக கேண்டீனில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் அல்லது துரித உணவுகளை சாப்பிட்டுவிட்டு காலை உணவை முடித்துக்கொள்கின்றனர்.

ஆனால், இப்படி காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பது அல்லது ஆரோக்கியமற்ற உணவுகளை மாற்றாக எடுத்துக்கொள்வது, நீண்ட காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? குறிப்பாக, இருதய ஆரோக்கியத்தையும் பாதிக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, குறிப்பாக அது ஒரு நீண்டகால பழக்கமாக மாறும்போது, இருதய ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும். காலை உணவை சாப்பிடுவது மட்டுமே இருதய நோயை தனியாகத் தடுத்துவிடாது. இருப்பினும், அதனை தவிர்ப்பது பலரிடம் பலவிதமான ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கிறது.

அதாவது, காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு மதியத்திற்கு மேல் கடுமையான பசி ஏற்பட்டு, மதிய அல்லது இரவு உணவின் போது அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் உருவாகலாம். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கலோரி கொண்ட தின்பண்டங்கள், சர்க்கரை பானங்கள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் சூழலுக்கும் வழிவகுக்கும்.

இருதய ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் என்ன?

தொடர்ந்து சமநிலையற்ற உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது உடல் எடை அதிகரிப்பு, ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அளவுகளில் மாற்றம் போன்ற சூழலுக்கு வழிவகுக்கலாம். இவை அனைத்தும் இருதய நோய்க்கான முக்கியமான ஆபத்து காரணிகள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் தாக்கம் ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே இருக்கும். ஒருவர் காலை உணவை தவிர்த்தாலும், மற்ற வேளைகளில் சத்தான உணவுகளை சாப்பிட்டு, போதுமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து எடுத்துக்கொண்டு, உடல் எடையைச் சரியாக பராமரித்து வந்தால், காலை உணவைத் தவிர்ப்பதால் மட்டுமே இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூற முடியாது.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

காலை உணவை தவிர்ப்பதைவிட, நாள் முழுவதும் என்ன வகையான உணவுகளை உட்கொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

தவிர்க்க வேண்டியவை: சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், பொரித்த உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அடிக்கடி அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல வேண்டும்

சேர்க்க வேண்டியவை: முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் தேவையான அளவு புரோட்டீன் போன்றவற்றை உணவில் சேர்த்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us