/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கற்பூர புல்லில் இத்தனை நன்மைகளா?
/
கற்பூர புல்லில் இத்தனை நன்மைகளா?
UPDATED : அக் 03, 2023 04:39 PM
ADDED : அக் 03, 2023 04:37 PM

உடலில் ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க எடை குறைப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பூரப்புல் பற்றி அறிந்துகொள்வோம்..
கற்பூரப்புல் இதனை லெமன்கிராஸ் (LemonGrass) என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்பூரப்புல் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நல்ல (HDL) கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், செரிமான பிரச்சனைகள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க இந்த கற்பூரப்புல் பயன்படுத்தப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் தொற்றுநோய் பரவாமல் தடுக்கமுடியும்.
![]() |
இதில் ஃபோலிக் அமிலம், தாமிரம், தயாமின், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது வெகுவாக உதவுகிறது. இதுதவிர, தோலை மற்றும் கூந்தலை பராமரிக்க எலுமிச்சை புல் பெருமளவில் உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயோடு எலுமிச்சை புல் துளிகளை சிறிது கலந்து தோல் மற்றும் முடிகளில் தடவலாம்.
![]() |
இதன் முக்கிய பங்கே நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது தான். கற்பூரப்புல்லை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது காயவைத்தும் பயன்படுத்தலாம். இதுதவிர மூலிகைத் தேநீராகவோ கற்பூரப்புல் சாறுகள் ரத்த குளுக்கோஸ் அளவைக் கணிசமாகக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைப் போக்க உதவும். இதுபோக, நறுமண சிகிச்சையில் இது பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.
![]() |
இதன் இலைகள் மற்றும் தண்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கற்பூரப்புல் எண்ணெய் ஒரு சக்திவாய்ந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலும் சோப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட பராமரிப்பு வாசனைப் பொருட்களில் காணப்படுகிறது.