
வட கர்நாடகாவில் பாரம்பரிய உணவுகளில், 'ஹரக்கி ஹோளி' எனும் அரிசி போளி பிரபலமானது.
தீபாவளி நெருங்கும் நேரத்தில் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் நவதானியம்
கால் கப் பருப்பு வகைகள்
கால் கப் அரிசி
ஒரு கப் வெல்லம்
ஏலக்காய் துாள்
உப்பு
எண்ணெய்
கோதுமை மாவு
மைதா மாவு
சிறிதளவு ரவை
செய்முறை:
முதலில் நவதானியங்களை கழுவி, வடிகட்டி நிழலில் உலர்த்த வேண்டும். பின், நவதானியங்கள், கடலை பருப்பு, அரிசியையும் சேர்த்து வறுக்கவும். இம்மூன்றையும் மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
தொடர்ந்து கோதுமை மாவுடன் சிறிது மைதா, ரவை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து, 15 நிமிடம் வைக்கவும். கடாயில் வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பில் இருந்து இறக்கவும்.
இதனுடன் ஏலக்காய் துாள், நவதானிய கலவை மாவு சேர்த்து நன்கு கலந்து உருண்டையாக உருட்டி கொள்ளவும். பின்னர், சப்பாத்தி கட்டையில் வைத்து சப்பாத்தி போன்று தேய்க்கவும். பின், எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் அரிசி போளி ரெடி.