
தேவையான பொருட்கள்
அவல் - 2 கப்
பொடித்த வெல்லம் - 3/4 கப்
கொப்பரை துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பாதாம் - 10
திராட்சை - 10
நெய் - 4 டீஸ்பூன்
செய்முறை:
அடி கனமான வாணலியில் அவலை போட்டு, மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்து கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள். பின் மிக்சியில் போட்டு பொடியாக்குங்கள். இந்த பொடியுடன், வெல்லம், கொப்பரை துருவல், ஏலக்காயை போடுங்கள். இந்த கலவையை மிக்சியில் போட்டு பொடியாக்க வேண்டும்.
இந்த கலவை ரவை போன்று ஆகும். வாணலியை, அடுப்பில் வைத்து நெய் ஊற்றுங்கள். சூடானதும் முந்திரி, பாதாம், திராட்சையை போட்டு வறுத்து கொள்ளுங்கள். இதை மாவு கலவையுடன் சேர்ந்து, நன்றாக கலக்குங்கள்; தேவையான அளவில் உருண்டை பிடித்து கொள்ளுங்கள்.
தீபாவளிக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுத்தால், உங்களுக்கு பாராட்டு நிச்சயம்.