
செய்முறை: முதலில் சுறா மீன்களை துண்டுப்போட்டு அதில் மஞ்சள் துாள், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர், இதனை இட்லி தட்டில் ஒரு துணிப்போட்டு அதன் மீது வைத்து வேகவிடவும்.
இது ஆறியதும் தோல், முள்ளை எடுத்துவிட்டு மீன் துண்டுகளை மசித்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும் சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர், மீன் சேர்த்து நன்றாக கிளறி அதன் நீர் போகும்வரை வதக்கவும். இறுதியாக, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு பிழிந்து கலந்தால் சுறா புட்டு ரெடி. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.