ADDED : அக் 25, 2024 09:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக எந்த இனிப்பு செய்தாலும், அதனுடன் பாலை சேர்ப்பது வழக்கம். ஆனால் பாலை வைத்து மட்டுமே செய்யும், இனிப்பாக 'கலகந்த் ரெசிபி' உள்ளது. வாய் நன்கு அகன்ற பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பால் கெட்டியாகி வரும்போது, எலுமிச்சை பழ சாற்றை பாலுடன் சேர்த்து பிழிந்து விட வேண்டும். பால் திரிந்து, கெட்டியான பதத்துக்கு வரும்.
அப்போது, சர்க்கரை கலந்து கெட்டியானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும். அதன்பின், ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு துணியை வைத்து நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.
இரண்டு மணி நேரம் கழித்து பாத்திரத்தில் இருந்து, தட்டில் போட்டு அதற்கு மேல் ஏலக்காய் பவுடர் துாவி சாப்பிட்டால், கலகந்த் கிடைத்துவிடும். குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர்.