தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/அரிசி பாயசம் தயாரிப்பது எப்படி?

அரிசி பாயசம் தயாரிப்பது எப்படி?

அரிசி பாயசம் தயாரிப்பது எப்படி?


UPDATED : ஆக 31, 2026 07:50 AM

ADDED : ஆக 29, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 07:50 AM ADDED : ஆக 29, 2026 04:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரிசியில் செய்யப்படும் கீர் இந்தியாவின் பேவரைட் இனிப்பு வகை ஆகும். இது பாஸ்மதி அரிசி, பால், நட்ஸ், உலர்பழங்கள் மற்றும் குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்படுகிறது. ரைஸ் கீர் வட இந்திய மாநிலங்களில் சாவல் கி கீர் என்றும் அழைக்கப்படுகிறது. இது வடஇந்திய உணவில் மிகவும் பிரபலமான கீர் வகைகளில் ஒன்றாகும். இந்த சுவையான ரெசிபியை தயாரிக்க ஈசியான வழிமுறைகளை பார்க்கலாம் வாங்க...



தேவையான பொருட்கள் :

100 கிராம் சர்க்கரை

50 கிராம் அரிசி

1 ஸ்பூன் பச்சை ஏலக்காய்

1 தேவையான குங்குமப்பூ

1 ஸ்பூன் பாதாம்

1 ஸ்பூன் திராட்சை

1 லிட்டர் பால்

செய்முறை :

அரிசியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை ஒரு கிண்ணத்தில் எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பாயசம் அடிபிடிக்காமல் இருக்க, ஒரு பானில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அதில் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது அதில் குங்குமப்பூ இழைகளையும் சேர்த்து, பானில் அடி பிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். அப்படியே 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

நாம் ஏற்கனவே ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து கொதிக்கும் பாலில் அரைத்த அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி முழுதாக வேகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

பால் கெட்டியாகத் தொடங்கியதும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்த பிறகு, முந்திரி, திராட்சை, பாதாம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.

2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான அரிசி பாயாசத்தை சூடாகவும் அல்லது பிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குளிர்ச்சியாகவும் உங்கள் ரசனைக்கேற்ப பரிமாறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us