/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
பன்னீரில் ஜிலேபி செய்ய ஆசையா...?
/
பன்னீரில் ஜிலேபி செய்ய ஆசையா...?
ADDED : நவ 01, 2024 11:05 PM

பொதுவாக பிரியாணி, குருமா, பாலக் பன்னீர், கறிக்குழம்பு என, பல்வேறு உணவு வகைகளுக்கு பன்னீர் பயன்படுத்துவர். பன்னீரில் இனிப்பு ஜிலேபியும் செய்யலாம் என்பது, பலருக்கும் தெரியாது. இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்
கெட்டியான பால் - 1.5 லிட்டர்
வினிகர் - கால் கப்
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஆரஞ்சு நிற பொடி - ஒரு சிட்டிகை
ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
மைதா - 2 ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் நீரையும், வினிகரையும் சம அளவில் கலந்து தனியாக வையுங்கள். அடுப்பில் பாலை வைத்து கெட்டியாகும் வரை கொதிக்க விடுங்கள். கெட்டியானதும் ஏற்கனவே கலந்து வைத்துள்ள தண்ணீர், வினிகர் கலவையை பாலில் சேர்க்கவும்.
அப்போது பால் திரிந்து, தண்ணீர் தனியாக பிரிந்து வரும். அதை ஆற விடுங்கள். அதன்பின் துணியில் வைத்து கெட்டியாக பிழியுங்கள். சிறிது நேரம் கழித்து மீண்டும் பிழிய வேண்டும். அப்போது தான் தண்ணீர் முற்றிலுமாக அகற்றப்பட்டு, மாவு போன்ற பதத்தில் பன்னீர் கிடைக்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து, சர்க்கரை போட்டு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். சர்க்கரை கரைந்து பேஸ்ட் போன்று ஆகும் வரை கொதிக்க விடுங்கள். பாகு தயாரானதும் ஆரஞ்சு நிற பொடி, ஏலக்காய் துாளை போடுங்கள். இந்த கலவையை தட்டில் எடுத்து வைத்து, கையால் நன்றாக பிசையுங்கள். அதன்பின் மைதா, சோளமாவையும் போட்டு பிசைந்து கொள்ளுங்கள்.
சிறிய கிண்ணத்தில், சிறிதளவு தண்ணீரில் சோடா உப்பை கலந்து கொள்ளுங்கள். இதை பிசைந்து வைத்துள்ள மாவில் ஊற்றவும். அதன்பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, ஜிலேபி வடிவில் பிழிந்து எண்ணெயில் இடவும். இரண்டு பக்கமும் வெந்ததும், எடுத்து சர்க்கரை பாகில் போடுங்கள்.
அரை மணி நேரம் ஊறிய பின், வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடிக்கும்.