/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
இது.. அது இல்ல.. பாரிஸ் பேஷன் உடையை அன்றே கணித்த வடிவேலு!
/
இது.. அது இல்ல.. பாரிஸ் பேஷன் உடையை அன்றே கணித்த வடிவேலு!
இது.. அது இல்ல.. பாரிஸ் பேஷன் உடையை அன்றே கணித்த வடிவேலு!
இது.. அது இல்ல.. பாரிஸ் பேஷன் உடையை அன்றே கணித்த வடிவேலு!
UPDATED : செப் 29, 2023 07:40 PM
ADDED : செப் 29, 2023 07:33 PM

பேஷன் துறையில் மிகப் பிரபலமான நிகழ்வு பாரிஸ் பேஷன் வீக். இது ஆண்டுக்கு இருமுறை நடக்கும். இந்நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற பேஷன் நிறுவனங்கள் தங்களது புதிய பாணி உடைகளைக் காட்சிப்படுத்தும். தற்போது நடைபெற்று வரும் பேஷன் வீக்கில் பெண்கள் அணிந்த உடை இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த சொற்றொடர் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ, பேஷன் துறைக்கு அம்சமாக பொருந்தும். ஏனென்றால் உலகளவில் மக்களின் பேஷன் தேர்வு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாறிக்கொண்டே இருக்கும். புதியது பழசாகும். பழையது சில மாற்றங்களுடன் மீண்டும் முன் வரிசைக்கு வரும்.
![]() |
பேஷன் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள பேஷன் வீக் என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் உலகளவில் நான்கு நிகழ்வுகள் பிரசித்தம். நியூயார்க் பேஷன் வீக், மிலன் பேஷன் வீக், லண்டன் பேஷன் வீக் மற்றும் பாரிஸ் பேஷன் வீக். இவற்றை பிக் ஃபோர் என்பார்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் தங்கள் தயாரிப்பை மாடல்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
பாரிஸ் நீண்ட காலமாக ஒரு பேஷன் தலைநகராக உள்ளது. பதினைந்தாம் லூயிஸ் மன்னர் பாரிஸை ஆடம்பர பேஷனுக்கான மையமாக மாற்றினார். இப்போது நடக்கும் பாரிஸ் பேஷன் வீக் 19 ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இன்று ஆண்டுக்கு 2 முறை, ஒன்று பிப்ரவரி/மார்ச் மாதங்களில், இரண்டாவது செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் நடக்கிறது.
![]() |
இப்போதைய சீசனில் விதவிதமான ஆடைகளுடன் மாடல்கள், நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் டெராரியம் உடையுடன் வலம் வந்த மாடல்கள் வைரலாகியிருக்கின்றனர். ஸ்டிராப்லெஸ் கவுன் போன்ற உடையில் பாட்டம் டிரான்ஸ்பிரன்ட் ஆகவும், வட்டமாக அகன்றும் காணப்படுகிறது. அதில் உண்மையான மலர்களும், பட்டாம்பூச்சிகளும் விடப்பட்டு ஒளிரூட்டப்பட்டுள்ளன.
இதனை பலர் “நடமாடும் ரகசிய பூந்தோட்டம்”, “தேவதைகள்”, ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளனர். பலர் உண்மையான பட்டாம்பூச்சிகளை பயன்படுத்தியதற்காக விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் நெட்டிசன்கள் “இது அது இல்ல” என்று கோவில் படத்தில் வடிவேலு நாய் கடிக்கு பின்னர் கூடையைக் கட்டிக்கொண்டு காத்தோட்டமாக நடந்து வரும் படத்தை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.