UPDATED : அக் 03, 2023 06:18 PM
ADDED : அக் 03, 2023 06:16 PM

ஷாங்காய் பேஷன் விழா சீனாவில் வளரும் இளம் ஆடை வடிவமைப்பாளர்களை முன்னேற்றவும் அவர்களுக்கு உலகளவில் அறிமுகம் அளிக்கவும் சீன அரசால் கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கி, நடத்தப்பட்டு வருகிறது. சீன பாரம்பரிய ஆடைகளில் இந்த ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களது கைவண்ணத்தைக் காட்டி வருகின்றனர்.
சீன பேஷன் ஆடைகள் இந்த விழாவில் காட்சிபடுத்தப்படும். மேலும் பிரம்மாண்ட மேடை விழாவில் ஆடை வடிவமைப்பாளர்கள் அமர்ந்து உரையாற்றுவர்.
![]() |
இத்தாலியின் மிலன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் மிலன் பேஷன் வீக் உலகப் புகழ்பெற்ற பேஷன் விழா. இந்த விழாவுடன் தற்போது ஷாங்காய் பேஷன் வீக் வர்த்தக ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி சீன பேஷன் ஆடைகள் மிலனிலும், மிலன் ஆடைகள் சீனாவிலும் காட்சிபடுத்தப்படுகின்றன. இதன்மூலம் ஆசிய-ஐரோப்பிய பேஷன் நட்புறவு பலப்படுமென சீனா நம்புகிறது.
![]() |
சீனாவின் பாரம்பரிய உடைகள் தற்போது இளைய தலைமுறையை அதிகம் ஈர்த்து வருகிறது. பேஷன் உடைகள் என்றாலே மேலை நாடுகள்தான் என்றிருந்த காலம் போய் தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் பேஷன் துறையில் முன்னணி வகித்துவருவது குறிப்பிடத்தக்கது.