/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
வந்தாச்சு 'பிளஸ் சைஸ்' பேஷன் இனி நாங்களும் கலக்குவோம்ல!
/
வந்தாச்சு 'பிளஸ் சைஸ்' பேஷன் இனி நாங்களும் கலக்குவோம்ல!
வந்தாச்சு 'பிளஸ் சைஸ்' பேஷன் இனி நாங்களும் கலக்குவோம்ல!
வந்தாச்சு 'பிளஸ் சைஸ்' பேஷன் இனி நாங்களும் கலக்குவோம்ல!
UPDATED : ஜூலை 13, 2025 09:10 AM
ADDED : ஜூலை 13, 2025 12:13 AM

உடல் பருமனாக இருப்பதற்காக மட்டுமல்ல; அணியும் ஆடைகளாலும் எழுந்த நக்கலான விமர்சனங்களை இனி, 'பிளஸ் சைஸ்' நபர்கள் கேட்க தேவையில்லை. பேஷன் உலகில், பெரிய சைஸ் ஆடைகளுக்காக தனிப்பட்ட பிராண்டுகள், ஷோரூம்கள், ஆன்லைன் சேனல்கள் உருவாகி வருகின்றன. இனி நாங்களும் கலக்குவோம் என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கின்றனர் இவர்கள்.
என் தேர்வே பதில் சொல்லும்
“எனக்கான ஆடைகள் 2 எக்ஸ்.எல்.,அளவில்தான் கிடைக்கும். எந்தவொரு நிகழ்ச்சிக்கும் பிடித்த உடையை தேர்ந்தெடுத்தால், 'இது உன்னை இன்னும் பருமனாக காட்டும்' என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதனால், பிடிக்கிறதோ இல்லையோ, எதையாவது எடுத்து தைத்துப் போட்டுச் செல்வேன். நான் அணியும் ஆடைகளை விமர்சிப்பார்கள் என்பதாலேயே, உறவினர்களின் நிகழ்ச்சிகளை கூட தவிர்த்த நேரம் உண்டு.
ஆனால், பருமனான நபர்களுக்காக பிரத்யேகமாக, ஷோரூம்கள் வந்த பிறகு, என்னை நான் ஒரு புதிய பார்வையில் பார்க்கத் தொடங்கினேன். எனக்கான பிட், எனக்கான ஸ்டைல் கிடைக்கும் போது, அந்த அனுபவம் வேற மாதிரி,” என்கிறார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகியான சரண்யா.