/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
பாரிஸ் பேஷன் வீக்; போடெக்ஸ் ஊசியால் பொலிவிழந்ததா ஐஸ்வர்யா ராய் முகம்?
/
பாரிஸ் பேஷன் வீக்; போடெக்ஸ் ஊசியால் பொலிவிழந்ததா ஐஸ்வர்யா ராய் முகம்?
பாரிஸ் பேஷன் வீக்; போடெக்ஸ் ஊசியால் பொலிவிழந்ததா ஐஸ்வர்யா ராய் முகம்?
பாரிஸ் பேஷன் வீக்; போடெக்ஸ் ஊசியால் பொலிவிழந்ததா ஐஸ்வர்யா ராய் முகம்?
UPDATED : அக் 07, 2023 11:11 AM
ADDED : அக் 06, 2023 07:15 PM

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியா மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற நடிகையாகவும் பேஷன் ஐகானாகவும் விளங்குகிறார். உலக அழகிப் பட்டம் வென்றவர், பிரபல நடிகை, நடனக் கலைஞர் என பன்முகங்கள் கொண்ட ஐஸ்வர்யா ராய், உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர், கேன்ஸ் பட விழாக்களிலும், பாரிஸ் பேஷன் வீக் உள்ளிட்ட பிரபல பேஷன் விழாக்களிலும் ஆண்டுதோறும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.
அபிஷேக் பச்சனுடனான திருமணத்துக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் உடல் எடை அதிகரிக்கத் துவங்கியது. தற்போது 49 வயதாகும் அவர், முகத்தில் சுருக்கங்கள் தெரியாமல் இருக்க மேக்கப்பில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் சமீப காலங்களில் முக சுருக்கத்தை மறைக்க ஐஸ்வர்யா ஆபத்தான போடெக்ஸ் ஊசிகளைப் பயன்படுத்தி வருவதாக இணையத்தில் உறுதி செய்யப்படாத செய்தி ஒன்று உலவியது.
சமீபத்தில் பாரிஸ் பேஷன் விழாவில் கலந்துகொண்ட அவர், அதீத உடல் எடையுடன் காணப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகியது. மஞ்சள், கருப்பு கலவையில் மின்னும் கவுன் அணிந்து இந்த விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் முகம் சற்று வீங்கிக் காணப்பட்டது. போடெக்ஸ் ஊசிகள் செலுத்திக்கொண்டால் முக சுருக்கம் தற்காலிகமாக மறைந்து விழாவில் கலந்துகொள்ளும் சில மணிநேரங்களுக்கு மட்டும் வீங்கிக் காணப்படும். இது ஒரு ஆபத்தான ஸ்டீராய்டு ஊசி. இது உடலில் பலவித உபாதைகளை நாளடைவில் ஏற்படுத்தும்.
பேஷன் விழாவில் கலந்துகொள்ள ஐஸ்வர்யா இந்த ஊசியைப் பயன்படுத்தி இருப்பதால் அவரது முகம் வீக்கம் அடைந்துள்ளது என நெட்டிசன்கள் கமென்ட் பதிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த விழாவில் ஐஸ்வர்யாவின் புகைப்படங்கள் பல, இணையத்தில் கிண்டலுக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.