sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

பேஷன்

/

பண்டிகை கால பேஷன்... ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் பூஜா ஹெக்டே !

/

பண்டிகை கால பேஷன்... ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் பூஜா ஹெக்டே !

பண்டிகை கால பேஷன்... ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் பூஜா ஹெக்டே !

பண்டிகை கால பேஷன்... ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையில் பூஜா ஹெக்டே !


UPDATED : செப் 29, 2023 01:36 PM

ADDED : செப் 29, 2023 01:35 PM

Google News

UPDATED : செப் 29, 2023 01:36 PM ADDED : செப் 29, 2023 01:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரபல நடிகை பூஜா ஹெக்டே அணியும் விதவிதமான உடைகள் பேஷன் உலகில் அவரை தனித்துக் காட்டுகின்றன. மாடர்ன் உடைகளோ அல்லது புடவையோ... எதுவாக இருந்தாலும் பார்வையாளர்களை வெகுவாகக் கட்டிபோடுவார். குறிப்பாக, அவ்வப்போது அழகிய புடவைகளில் பாரம்பரிய அழகுடன் ஜொலிப்பார் இவர்.

இதற்கேற்ப சமீபத்தில் சாரிகா பிராண்டின் ஆறு கஜம் மஞ்சள் நிறப் புடவையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் பூஜா ஹெக்டே பகிர்ந்துள்ள புகைப்படங்கள், பண்டிகை கால பேஷன் கலெக்ஷனை பறைசாற்றுகிறது. மஞ்சள் நிற ஆர்கன்சா பட்டுப் புடவையானது நேர்த்தியான தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு எம்பிராய்டிரியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில், பறவைகள், பூக்கள் போன்ற டிசைன்கள் இடம்பெற்றிருந்தது பாரம்பரிய லுக்கை அளித்தது. அதேவேளையில், ஸ்லீவ்லெஸ் மற்றும் ரவுண்ட் நெக்லைன் டிசைன் என மாடர்ன் லுக்கில் மிரட்டினார் பூஜா.

Image 1176374
பெரியளவிலான ஜும்கா தோடுகள், விரித்த கூந்தல், வளையல்கள் என மினிமல் லுக்கில் பழமையும், புதுமையும் கலந்தவாறு அழகாக ஜொலித்தார் பூஜா ஹெக்டே.
Image 1176375
இதேபோல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிஸ்தா பச்சை நிறத்தில் புடவையை அணிந்திருந்தார். முந்தானைப் பகுதியில் பெரியளவிலான பிரின்டட் பூக்கள், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் என ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தினார் பூஜா ஹெக்டே. கூந்தலை படிய வாரி இடப்பட்ட கொண்டை, அதன்மீது பாந்தமாக ஆக்ரமித்திருந்த மல்லிகை பூச்சரம், ஜூம்கா தோடுகள் என மினிமல் அலங்காரத்தில் மிளிர்ந்தார் அவர்.






      Dinamalar
      Follow us