/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
பேஷன் ஷோவுக்காக பட்டாம்பூச்சிகளை சிறைபிடித்ததால் சர்ச்சை..!
/
பேஷன் ஷோவுக்காக பட்டாம்பூச்சிகளை சிறைபிடித்ததால் சர்ச்சை..!
பேஷன் ஷோவுக்காக பட்டாம்பூச்சிகளை சிறைபிடித்ததால் சர்ச்சை..!
பேஷன் ஷோவுக்காக பட்டாம்பூச்சிகளை சிறைபிடித்ததால் சர்ச்சை..!
UPDATED : செப் 29, 2023 06:32 PM
ADDED : செப் 29, 2023 04:31 PM

பாரீஸ் பேஷன் வீக்கில், மாடல்கள் அணிந்து வந்த விளக்கு பொருத்தப்பட்ட முப்பரிமாண கவுனில், பட்டாம்பூச்சிகளை உயிருடன் அடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உலகளவில் மிகவும் பிரபலமான பாரீஸ் பேஷன் வீக் , ஆண்டுக்கு இருமுறை
நடத்தப்படும். இந்தாண்டு இளவேனில்/ கோடை சீசனுக்கான பேஷன் வீக், பிரான்ஸ்
தலைநகர் பாரீஸில் செப்.,25ல் துவங்கி அக்.,3ம் தேதி வரை நடக்கிறது. பேஷன் நிகழ்ச்சியில், பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளை, மாடல்கள்
அணிந்து கேட் வாக் செய்வது வழக்கம்.
3வது நாளான நேற்று, ஜப்பானை சேர்ந்த ஜுன் தகாஹாஷி என்ற ஆடை வடிவமைப்பாளர், வடிவமைத்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்கு பொருத்தப்பட்ட முப்பரிமாண கவுனை பெண் மாடல்கள் அணிந்து வலம் வந்தனர். அதில் உயிருடன் உள்ள பட்டாம்பூச்சிகள் அடைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
![]() |
பேஷன் நிகழ்ச்சிக்காக உயிருடன் உள்ள பட்டாம்பூச்சிகளை சிறைப்பிடித்த சம்பவம்
தொடர்பாக நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நெட்டிசன் ஒருவர்,
'விலங்குகளை நிம்மதியாக விட்டுவிட முடியாதா'? என குறிப்பிட்டார். மற்றொருவர்,
இந்த பேஷன் உணர்வு,'மனிதாபிமானமற்றது' என்று மற்றொரு நெட்டின்சன்
குறிப்பிட்டார்.
'திறமையற்றவர்களே, விலங்குகளை கொல்வதை நிறுத்துங்கள், மறைமுகமாக
விலங்குகளைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்'என மற்றொரு நெட்டிசன் பதிவிட்டார்.
விமர்சனங்களுக்கு மத்தியில், சில நெட்டிசன்கள், ஆடை வடிவமைப்பாளரின் படைப்பு
திறனை கண்டு உண்மையிலேயே வியப்பதாக பதிவிட்டனர்.