/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
பேஷன் உலகை கலக்கும் 10 வயது அமெரிக்க சிறுமி..!
/
பேஷன் உலகை கலக்கும் 10 வயது அமெரிக்க சிறுமி..!
UPDATED : அக் 05, 2023 06:19 PM
ADDED : அக் 05, 2023 04:22 PM

அமெரிக்காவை சேர்ந்த 10 வயது சிறுமியான டைலன் பிக்ஸ், பாரீஸ் பேஷன் வீக்கில் பங்கேற்று, உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அமெரிக்காவின் மியாமியை சேர்ந்த பேஷன் இன்புளூயன்சராக வலம் வரும் டைலன் பிக்ஸை, இன்ஸ்டாகிராம், டிக் டாக்கில் சுமார் 15 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். சமீபத்தில் பாரீஸ் பேஷன் வீக்கில், பால்மைன் ஷோவில் பங்கேற்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். பிக்ஸ் 18 மாத குழந்தையாக இருந்த போது அவரது அம்மா, சமூகவலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனை கண்ட விளம்பர நிறுவனம் ஒன்று வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிக்ஸ் பெயரில் தனி சமூகவலைதள கணக்கு துவங்கி, தற்போது அதனை அவரது தாய் அதனை நிர்வகித்து வருகிறார். அவரது தந்தை பாதுகாவலராகவும், புகைப்படக்காரராகவும் பின் தொடர்ந்து வருகிறார்.
![]() |
நேர்காணலும் எடுத்துள்ளார்.
பாரீஸ் பேஷன் வீக்கில் பங்கேற்ற டைலன் பிக்ஸ் கூறுகையில்,
'நான் பேஷனை விரும்புகிறேன். புதியவர்களைச் சந்திப்பதும், அவர்களை நேர்காணல் செய்வதும், அவர்கள் சொல்வதைப் பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும். குடும்பத்தை
மிகவும் மிஸ் பண்றேன். மியாமியை மிஸ் செய்கிறேன். ஆனால் மியாமியில் இருந்து வரும் உணவை தவறவிடவில்லை. இங்குள்ள உணவுகளையும் விரும்புகிறேன். குழந்தைகளுடன் மிகவும் நன்றாக இருக்கிறேன்.பெரியவர்களை மிகவும் நேசிக்கிறேன்.'
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமியிடம் பேஷனை திணிப்பதாக எழுந்த விமர்சனத்துக்கு டைலன் பிக்ஸின் தந்தை கூறுகையில், ' பிக்ஸ் பள்ளிக்கு செல்வதை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்கிறோம். வேறு தொழிலைத் தொடர தயாராக இருக்கிறாள் என்றால், அது அவளுடைய விருப்பத்தை பொறுத்தது தான். ஒரு நொடியில் பேஷன் உலகை விட்டு வெளியேறுவோம். இதில் எந்தக் கவலையும் இல்லை.' என்றார்.