/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
நிகழ்வுகள்
/
ஓடிடி தளத்தில் இந்த வார ரிலீஸ் : செக் பண்ணுங்க..!
/
ஓடிடி தளத்தில் இந்த வார ரிலீஸ் : செக் பண்ணுங்க..!
UPDATED : செப் 17, 2023 06:11 PM
ADDED : செப் 17, 2023 04:01 PM

ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா ரசிகர்களின் எண்ணிக்கையும், திரைப்படங்களின் வருகையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை அறிந்து கொள்வோம்.
அநீதி(தமிழ்)
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளித்திரையில் வெளியான அநீதி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. கைதி படத்தில் மிரட்டிய அர்ஜூன் தாஸ் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை, கழுவேர்த்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களில் நடித்த துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். கிரைம் த்ரில்லாராக வெளியான இந்த திரைப்படம் வெள்ளித்திரையில் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாகியுள்ளது.
போலோ ஷங்கர்(தெலுங்கு)
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார், லெட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி உள்ளிட்டோர் நடித்த வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கான போலோ ஷங்கர் திரைப்படத்தில் சீரஞ்சீவி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெள்ளித்திரையில் வரவேற்பை பெறாத பட்சத்தில் தற்போது, ஓடிடியில் இந்த படம் இந்த வாரம் ரிலீசாகியுள்ளது. சிரஞ்சீவி ரசிகர்களுக்கு பெரும் ட்ரிட்டாக அமையும். நெட்ப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகியுள்ளது.
டைனோசர்ஸ் (தமிழ்)
நடிகர் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக் நடித்த டைனோசர்ஸ் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. வெள்ளித்திரையில் பார்க்க தவறியவர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆக்ஷனை மையமாக வைத்து இந்த படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. சிம்பிள் சவுத் ஓடிடி தளத்தில் கணலாம்.
மை3
நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர் சாந்தனு, முகேன் ராவ் நடித்துள்ள மை3 வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. காமெடி+ ரொமான்டிக் ஜானரில் வெளிவந்துள்ள இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.