/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
நிகழ்வுகள்
/
குஷி முதல் கிக் வரை...இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
/
குஷி முதல் கிக் வரை...இந்த வார ஓடிடி ரிலீஸ்...!
ADDED : செப் 30, 2023 06:01 PM

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஓடிடி தளங்கள் உதவி செய்கின்றன. இவை வந்த பிறகு தியேட்டர் இல்லாத கிராமங்கள் இல்லை என்ற அளவிற்கு,சினிமா ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை அறிந்து கொள்வோம்.
கிங் ஆப் கோதா
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியானது. கேங் ஸ்டார் கதையை மையமாக வைத்துள்ள இந்த திரைப்படத்தை காண இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
கிக்
திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஹிட் அடித்த 'டிடி ரிட்டன்ஸ்' படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கிக்'. தம்பி ராமையா, கிங்காங், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி படம் வெளியானது.
குஷி
விஜய் தேவரகொண்டா - சமந்தா நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படம் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. செப்டம்பர் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.