UPDATED : அக் 04, 2026 10:02 AM
ADDED : அக் 03, 2026 03:14 PM

முகத்தில் திடீரென ஒரு பரு வந்தாலே, அதை மறைக்க என்ன செய்யலாம் என யோசிப்பது இளைஞர்களுக்கு புதிதல்ல.
அந்த வரிசையில் தற்போது அழகு பராமரிப்பில் இடம்பிடித்திருக்கிறது 'பிம்பிள் பேட்ச்'. பரு இருக்கும் இடத்தில் சிறிய ஸ்டிக்கர் போல ஒட்டிக்கொள்ளும் இந்த பேட்ச்கள், முகப்பருவை மறைப்பதோடு அதை அடிக்கடி தொடுவது, கிள்ளுவது போன்ற பழக்கத்தையும் தவிர்க்க உதவுகின்றன.
முன்பு பருவை மறைக்க அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்திய நிலையில், தற்போது பரு இருக்கும் இடத்திலேயே குட்டியாக பேட்ச் ஒட்டி, இயல்பாக இருப்பது இளம் தலைமுறையிடம் புதிய அழகு பராமரிப்பு பழக்கமாக மாறி வருகிறது.
வலைதளங்களில் விதவிதமான வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கும் பேட்ச்கள் கவனம் பெறுகின்றன. சிலர் இரவில் பயன்படுத்த, சிலர் வெளியே செல்லும்போதும் பயன்படுத்துகின்றனர்.
குட்டி ஸ்டிக்கர் பெரிய டிரெண்ட் என்று சொல்லும் அளவுக்கு, இப்போது இளம் வயதினரின் உடன் பிறவா சகோதரியாகி விட்டது.
