sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

பிரசவ கால தழும்புகள்: கவலை வேண்டாம்...!

/

பிரசவ கால தழும்புகள்: கவலை வேண்டாம்...!

பிரசவ கால தழும்புகள்: கவலை வேண்டாம்...!

பிரசவ கால தழும்புகள்: கவலை வேண்டாம்...!


UPDATED : செப் 30, 2023 02:50 PM

ADDED : செப் 30, 2023 02:43 PM

Google News

UPDATED : செப் 30, 2023 02:50 PM ADDED : செப் 30, 2023 02:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்,பெண் இருபாலருக்கும் சரும பராமரிப்பில் மிகவும் சவாலாக இருப்பது தழும்புகளே. இதை போக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் சிலருக்கு பலன் தராது. குறிப்பாக பெண்களுக்கு பிரசவத்திற் பிறகு எற்படும் தழும்புகளும், வளரும் போது தசைகள் விரிவு காரணமாக ஏற்படும் தழும்புகள் ஏற்படுகிறது.

பிரசவித்த பெண்கள் மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பு காரணமாக இளம்வயதில் தொடை , கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் இந்த தழும்புகள் உருவாகிறது. இதை தவிர எடையை குறைக்க ஜிம்மில் பயிற்சி செய்யும் போதும் இந்த தழும்புகள் உருவாகிறது. இதை தடுப்பதற்கான மற்றும் எளிதில் மறைவதற்கான இயற்கை வைத்திய முறைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

பாதாம் எண்ணெய்

Image 1176876
சர்க்கரையுடன் சமஅளவு பாதாம் எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதை தழும்புகள் உள்ள இடத்தில் தேய்த்த பிறகு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தழும்புகள் மெல்ல மெல்ல மறையும். இதை வாரத்திற்கு 2அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

கற்றாழை

Image 1176877
சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கற்றாழை செல்லை, குளித்த பின்னர் தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மறையும்.

தேங்காய் எண்ணெய்

Image 1176875
விர்ஜின் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். தேங்காய் எண்ணெயை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து பின்னர் தண்ணீரால் கழுவினால் தழும்புகள் மறையும்.

விளக்கெண்ணெய்

Image 1176874
பிரசவ தழும்புகள் மற்றும் தசை விரிவு கோடுகளை விளக்கெண்ணெய் நீக்கும் தன்மை கொண்டது. இதை தழும்புகள் உள்ள அடிவயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறையும்.






      Dinamalar
      Follow us