/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
தனது பிராண்டிற்கு தானே மாடலாக மாறிய நயன்தாரா: 9ஸ்கின் விற்பனை துவக்கம்
/
தனது பிராண்டிற்கு தானே மாடலாக மாறிய நயன்தாரா: 9ஸ்கின் விற்பனை துவக்கம்
தனது பிராண்டிற்கு தானே மாடலாக மாறிய நயன்தாரா: 9ஸ்கின் விற்பனை துவக்கம்
தனது பிராண்டிற்கு தானே மாடலாக மாறிய நயன்தாரா: 9ஸ்கின் விற்பனை துவக்கம்
UPDATED : செப் 30, 2023 07:36 AM
ADDED : செப் 29, 2023 09:08 PM

நயன்தாரா 9 ஸ்கின் எனும் அழகு பொருட்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளார். அதன் விற்பனை செப்., 29 முதல் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளது. அதற்கான மாடலாக அவரே மாறி போஸ் கொடுத்துள்ளார்.
நயன்தாரா நடிகையாக மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தொழில்முனைவோராகவும், முதலீட்டாளராகவும் மாற்றிக் கொண்டுள்ளார். சினிமாவில் இருந்து ஈட்டும் பெரும் தொகையை மேலும் வளர்க்க அறிவுப்பூர்வமாக இத்தகைய திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இவற்றிற்கு அவரது கணவர் விக்னேஷ் சிவனும் உறுதுணையாக உள்ளார்.
![]() |
இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து அழகு பராமரிப்பு தயாரிப்புகளை 9ஸ்கின் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இதற்கான அறிமுக விழா மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் வெள்ளியன்று நடந்தது. விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார்.
![]() |
இரண்டு வகையான சீரம், இரண்டு வகையான க்ரீம் மற்றும் ஒரு எண்ணெய் தயாரிப்புகள் அவரது பிராண்டின் கீழ் விற்பனைக்கு வந்துள்ளன. அதன் விலைகள் குறைந்தபட்சம் ரூ.999 முதல் அதிகபட்சம் ரூ.1,899 வரை உள்ளது.
தனது பிராண்டிற்கு மாடலாக மாறி அவர் போஸ் கொடுத்த படங்கள் பேஸ்புக், டிவிட்டரில் பரவி வருகிறது.