/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
நரைக்கு திரை போடும் ஹேர் டையால் அலர்ஜியா?
/
நரைக்கு திரை போடும் ஹேர் டையால் அலர்ஜியா?
UPDATED : செப் 19, 2023 03:07 PM
ADDED : செப் 19, 2023 03:04 PM

இன்றைய பரபரப்பான சூழலில் முடிக்கு டை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதில், முடி நரைப்பதை தடுக்க முடியாவிட்டாலும், நாம் ஹேர்டை கொண்டு மறைக்க முடியும். ஆனால் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் டைகளில் அமோனியா, பெராக்ஸைடு, டோலுயின், பாரா பெனிலின் டயாமின் மற்றும் ரெஸ்கார்சினால் போன்ற ஆபத்தான பல ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கலாம்.
இவற்றை பயன்படுத்தும் போது சிலருக்கு சருமத்தில் எரிச்சல், தோலில் கருந்திட்டுகள் போன்ற சரும பிரச்னை மட்டுமின்றி சுவாசக் கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகளின் செயலிழப்பு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளும் வரலாம். உடனே இந்த பாதிப்புகள் தெரியாவிட்டாலும் பல ஆண்டுகள் கழித்தும் வரக்கூடும். அலர்ஜியில் துவங்கி நாள்பட்ட ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை பல ஆபத்துகள் ஹேர் டையால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
![]() |
ஹேர் டை பிரச்னையை தவிர்க்க சில டிப்ஸ்:
• ஹேர் டை போட்ட முதல் நாளே அலர்ஜி தென்பட்டால் அதை உபயோகிப்பதை உடனடியாக நிறுத்துங்கள்.
• ஹேர் டை உயோகிப்பதால் சில நாட்கள் கழித்து பக்க விளைவுகள் தென்பட்டால் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய கூந்தல் டை பாக்கெட்டுடன் மருத்துவரை கலந்துரையாடுவது அவசியம்.
• பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவும்.
• தற்போது கெமிக்கல் கலப்பில்லாத இயற்கையான ஹேர் டை பிராண்டுகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
• உங்கள் சருமதிற்கு இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நல்லது.
• மருத்துவரின் ஆலோசனையுடன் கூந்தலுக்கு ஏற்ற டையை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
• குறிப்பாக பிபிடி ஃப்ரீ மற்றும் அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் டையை உபயோகிக்கவும்.
![]() |
இளைமையில் நரையை எப்படி தவிர்க்க?
உடலில் சுரக்கும் 'மெலனின்' என்ற நிறமிதான் தோல் மட்டுமல்ல கூந்தலின் கருமை நிறத்துக்குக் காரணம். பொதுவாக 40 வயது கடக்கும் போது, இந்த நிறமிகளை 'டிரையோஸின்' என்ற என்ஸைம் தடை செய்கிறது. ஆனால் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட இந்த பாதிப்பு ஏற்படுகிறது. தவறான உணவுப்பழக்கம், மன அழுத்தம், வைட்டமின் பற்றாக்குறை சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால் கூட கூந்தல் நரைக்கலாம்.
குழந்தைகள், இளைஞர்களுக்கு இளைமையில் நரைக்கு என்ன காரணம் என்பதையும் கண்டறிய வேண்டும். கூந்தல் அல்லது சரும மருத்துவரை அணுகி, பரிசோதனைகள் மேற்கொண்டு அதை கண்டறியலாம். தேவையான வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை எடுபதன் மூலம் நரை பிரச்னை மேலும் தீவிரமாகாமல் தடுக்க முடியும்.