sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

இரவு நேரத்தில் சருமத்தில் அரிப்பு இருக்கா?: ஆரம்ப கவனிப்பு அவசியம்..!

/

இரவு நேரத்தில் சருமத்தில் அரிப்பு இருக்கா?: ஆரம்ப கவனிப்பு அவசியம்..!

இரவு நேரத்தில் சருமத்தில் அரிப்பு இருக்கா?: ஆரம்ப கவனிப்பு அவசியம்..!

இரவு நேரத்தில் சருமத்தில் அரிப்பு இருக்கா?: ஆரம்ப கவனிப்பு அவசியம்..!


UPDATED : செப் 25, 2023 06:13 PM

ADDED : செப் 25, 2023 05:41 PM

Google News

UPDATED : செப் 25, 2023 06:13 PM ADDED : செப் 25, 2023 05:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலருக்கு இரவு நேரங்களில் அவ்வபோது அரிப்பு உண்டாகும். இது இயல்பு என்றாலும் அரிப்பு தோலழற்சி குறித்து தெரிந்துக் கொள்வதும் அவசியமாகும். உடல் வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது தோலின் ஈரப்பதம் மற்றும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இரவில் அரிப்புக்கு பங்களிக்கும். இதை தடுக்கவில்லை என்றால் ஆரோக்கியமான தூக்கம் என்பது கேள்விக் குறியாக மாறிவிடும்.

வறட்சி


சருமத்தில் ஈரப்பதம் குறையும் போது வறட்சியால் அரிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விழித்திருப்பதால் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதை தடுக்க தூங்குவதற்கு முன்பு ஈரப்பதமூட்டும் கீரிம் வகைகள், மாய்ஸ்சரைசர் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவைகள் மருத்துவரின் ஆலோசனைபடி பயன்படுத்த வேண்டும்.

ஆரோக்கியமான குளியல்


சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் நோய்த்தொற்றுகளை தடுக்கவும் குளிப்பது முக்கியமாகும். இதனால் சரும நீரிழப்பு தடுக்கப்படுகிறது. குறைந்தது 3 நிமிடங்கள் சருமம் நீரேற்றத்துடன் இருக்க ஓட்ஸ் குளியல், ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த நீர் போன்றவை நல்லது. எனினும் எச்சரிக்கையுடன் இதை கையாள்வது அவசியமாகும்.

ஈரமேற்றுதல்


சருமம் வறண்டு போனால் அரிப்பு தலைதூக்கும். இதை தடுக்க அவ்வப்போது, ஈரத்துணியால் துடைப்பது சிறந்ததாகும். இரவு நேரங்களில் ஒருமுறை மட்டும் செய்யாமல் நேர இடைவெளியில் செய்வதன் மூலம் சருமம் தொடர்ந்து ஈரப்பதத்துடன் இருக்கும்.

மெல்லிய ஆடை

சரும அரிப்பால் அவதிப்படுபவர்கள் கம்பளி ஆடை, பாலிஸ்டர், அழுத்தமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இந்த ஆடைகளால் சருமம் எரிச்சலடைய கூடும். ஆகவே சுத்தமான பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவதே சிறந்தது ஆகும்.






      Dinamalar
      Follow us