sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

அழகு

/

பாத வெடிப்பு தொல்லை தருகிறதா?: தீர்வு தரும் கைவைத்தியம்..!

/

பாத வெடிப்பு தொல்லை தருகிறதா?: தீர்வு தரும் கைவைத்தியம்..!

பாத வெடிப்பு தொல்லை தருகிறதா?: தீர்வு தரும் கைவைத்தியம்..!

பாத வெடிப்பு தொல்லை தருகிறதா?: தீர்வு தரும் கைவைத்தியம்..!


ADDED : செப் 28, 2023 12:29 PM

Google News

ADDED : செப் 28, 2023 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் பாதங்களில் வறட்சி காரணமாக வெடிப்பு ஏற்படுகிறது. இதேபோல் உடல் எடை அதிகரிப்பால், அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகிறது. இதை கட்டுப்படுத்த எடையை குறைப்பது அவசியமாகும்.

குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் பாத வெடிப்பு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரும அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும்பாலான பெண்கள், பாதத்தை கண்டு கொள்வதில்லை. ஆரம்பத்தில் இதை கவனிக்காமல் விட்டால், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பெரியளவில் தொந்தரவுகளை கொடுக்கும். உடலின் ஒட்டுமொத்த அஸ்திவாரமாக உள்ள பாதங்களை ஐந்து நிமிடம் ஒதுக்கி கவனித்தால் இதுபோன்ற பிரச்னையை முற்றிலும் தடுக்கலாம்.

காரணம்

நாம் அணியும் காலணிகளால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக இவை வரலாம். நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்பால், வெடிப்புகள் உண்டாகி தொல்லை கொடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, சொரியாசிஸ், தைராய்டு சுரப்பி பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை இருந்தாலும் பாத வெடிப்பு எளிதில் வரும்.

பாத வெடிப்புகளை பின்வரும் இயற்கை பொருட்களை கொண்டு முற்றிலுமாக தடுக்கலாம்.

மருதாணி இலைகளை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, உலர்ந்த பிறகு கழுவினால் வெடிப்புகள் மறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முற்றிலும் குணமாகும். மருதாணி இலைகள் அதிகம் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால் அதிகம் நேரம் கால்களில் வைத்திருக்க வேண்டியது இல்லை.

வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.

தினமும் தூங்குவதற்கு முன்பு கால்களை நன்றாக கழுவி, உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்பு வராது.

ஒரு பாத்திரத்தில் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, அதில் பாதங்களை சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்தால் வெடிப்புகள் மறைந்து பாதம், பளபளப்பாக மாறும்.

பாதங்கள் வறண்டு காணப்பட்டால் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பளபளப்பாக மாற்ற முடியும். பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் வெடிப்புகள் மிருதுவாகி விரைவில் மறையும்.






      Dinamalar
      Follow us