/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஒன்றே முக்கால் வயதில் சாதித்த மைசூரு குழந்தை
/
ஒன்றே முக்கால் வயதில் சாதித்த மைசூரு குழந்தை
ADDED : ஆக 23, 2025 11:08 PM

மைசூரை சேர்ந்த 1 வயது 8 மாத குழந்தை, 215க்கும் மேற்பட்ட பொருட்களின் பெயர்களை கூறி, பல்வேறு சாதனை படைத்துள்ளது.
சாதனைக்கு வயதில்லை என்று கூறுவர். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், மைசூரு நகரின் ராகுல் - ரம்யா தம்பதியின் 1.8 வயது மகள் ராமரக் ஷா திகழ்கிறது. குழந்தையின் தாய், கடவுள் பெயர், சுலோகங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை குழந்தைக்கு கற்பித்து வந்துள்ளார்.
இதன் விளைவாக, தற்போது 100க்கும் மேற்பட்ட பிளாஷ் கார்டுகளை அடையாளம் காண்பது, கடவுள்களின் பெயர்கள், தசாவதாரம், மந்திரங்கள், சுலோகங்கள், இசைக் கருவிகள், 25 காய்கறிகள், 30 பழங்கள், 28 விலங்குகள், பூச்சிகள், எழுத்துகள், கன்னட உயிரெழுத்துகள், 10 மின்னணு சாதனங்கள், 10 நாடுகளின் தேசிய கொடிகள், 7 இந்திய நாணயங்கள், 8 இந்திய பாரம்பரிய சின்னங்கள், 10 விஞ்ஞானிகளின் பெயர்கள், தேசிய சின்னங்களின் பெயர்கள் உட்பட பல்வேறு பொருள் தலைப்புகள் பற்றியும் கூறுகிறது.
குழந் தையின் திறமையை பாராட்டி, குழந்தைகள் பிரிவில் தேசிய சாதனை, உலக சாதனை, சூப்பர் கிட் விருது, கர்நாடக புத்தக சாதனை மற்றும் இந்திய புத்தக சாதனை விருதுக ள் வழங்கப்பட்டுள்ளன.
- நமது நிருபர் -