தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ நத்தைகள் மூலம் சம்பாதிக்கலாம் மைசூரு ஆராய்ச்சி மையம் தகவல்

 நத்தைகள் மூலம் சம்பாதிக்கலாம் மைசூரு ஆராய்ச்சி மையம் தகவல்

 நத்தைகள் மூலம் சம்பாதிக்கலாம் மைசூரு ஆராய்ச்சி மையம் தகவல்


ADDED : ஆக 29, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

வ யல்களில் நத்தைகள் காணப்பட்டால், அவை பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதி கொல்லப்படுகின்றன. இருப்பினும், நத்தைகள் வளர்த்தால் லாபகரமாகவும் இருக்க முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

நத்தை பண்ணை நத்தையை எப்படி வளர்ப்பது, லாபம் ஈட்டுவது என்பது குறித்து மக்களுக்கு கற்பிக்க, பி.ஐ.ஆர்.ஏ.சி., எனும் மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம்; பி.ஐ.ஜி., எனும் உயர் தொழில்நுட்ப துவக்க மானியம்; கர்நாடகாவின் ஸ்டார்ட் ஆப் எலிவேட் மானியம்; ஆரிக் காஸ்மோ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆதரவுடன், மைசூரில் ஜே.எஸ்.எஸ்., உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி வளாகத்தில் உள்ள உயிர் அறிவியல் பள்ளி அருகில் நத்தை பண்ணை, 2022ல் திறக்கப்பட்டது.

இதை உயிர் அறிவியல் பள்ளியின் உதவி பேராசிரியர் டாக்டர் ஆஷா சீனிவாசன், ஆரிக் காஸ்மோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் விக்ரம் சிங் ஆகியோர் துவக்கியுள்ளனர்.

இங்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக, நத்தை பற்றி தொடர்ந்து படித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 2026 ஆக., 11ல், இதன் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கும், ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நத்தைகள் தங்கள் வாழ்நாள் முழுதும் அதன் மீதுள்ள ஓடுகளை சார்ந்து வாழ்கின்றன. ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, இவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். சளி போன்ற ஒரு திரவம் இவற்றின் இயக்கத்திற்கு உதவுகிறது.

4 ஆண்டுகளே இவற்றின் வாயில் ஆயிரக்கணக்கான சிறிய பற்கள் கொண்ட ஒரு 'ராடுலா' உள்ளது. ராடுலா என்பது நத்தை போன்ற விலங்குகளின் வாயில் காணப்படும் பற்கள் போன்ற நுண்ணிய அமைப்பை கொண்ட ஒரு நாக்கு. இது உணவை சுரண்டவும், வெட்டவும் அல்லது பாறைகளில் உள்ள பாசிகளை துடைத்து உண்ணவும் உதவும்.

இவை நான்கு ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. இருபால் உயிரிகளாக இருப்பதால், ஒவ்வொரு நத்தைக்கும் ஆண் - பெண் இனப்பெருக்கு உறுப்புகள் உள்ளன. மசாஜ் மையங்களிலும், பிற நாடுகளிலும் தோல் நோய்களுக்கான சிகிச்சைக்கு, நத்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. மைசூரில் துவங்கப்பட்டு உள்ள இனப்பெருக்க மையத்தில், தற்போது தோல் நோய்களுக்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் மற்ற ஆராய்ச்சிகளும் நடத்தப்படும்.

நன்மையே! ஜே.எஸ்.எஸ்., - ஏ.எச்.இ.ஆர்., உயிர் அறிவியல் பள்ளி உதவி பேராசிரியர் டாக்டர் ஆஷா சீனிவாசன் கூறியதாவது:

நத்தைகள் பயிர்களை சேதப்படுத்தும், ஈர நிலங்களை மாசுபடுத்தும் உயிரினங்கள் என்று நினைத்தவர்கள், இவை விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகின்றனர். மாற்று விவசாய நடவடிக்கையாக நத்தை வளர்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு குறைந்த நிலம், செலவு, எளிய மே லாண் மை இருந்தாலே போதும், வருவாய் கிடைக்கும். பெரிய அளவில் இடம் தேவையில்லை. அவற்றுக்கு தகுந்த நிழல், ஈரப்பதம், சுத்தமான நீர், சத்தான உணவு வழங்கினாலே போதும்; நன்றாக வளரும்.

நத்தைகள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும், சொரியாசிஸ் நோயை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். தற்போது தோல் நோய்களை குணப்படுத்துவது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் மற்ற முறைகள் குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்படும். இந்த நத்தையால் ஏராளமான நன்மைகள் உள்ளன. நத்தைகளை எப்படி பயன்படுத்துவது என்பதை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தரமான நத்தைகளை கொண்டு வந்தால், நாங்கள் அவற்றை வாங்குவோம். நத்தை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நாங்கள் வழிகாட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரிக் காஸ்மோ இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனர் விக்ரம் சிங் கூறுகையில், ''நத்தைகளில் 70,000 இனங்கள் உள்ளன. தற்போது, நாங்கள் தரையில் ஊர்ந்து செல்லும் நத்தை குறித்து அதிக ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

''ஒரு பண்ணையை துவங்க அதிகளவில் மூலதனம் தேவையில்லை. அதை எப்படி நிர்வகிப்பது என்பதை கற்றுக் கொண்டால் போதும். இந்த நத்தைக்கு பச்சை உணவு பொருட்களை அளிக்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us