/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
2,500 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சாகச வீரர்கள்
/
2,500 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சாகச வீரர்கள்
2,500 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சாகச வீரர்கள்
2,500 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சாகச வீரர்கள்
ADDED : டிச 28, 2025 05:02 AM

கொப்பால் மாவட்டம் ஹிரேசிந்தோகி கிராமத்தை சேர்ந்தவர் சிவராயப்பா, 32. சுகாதாரத்துறை அதிகாரி. இவரது நண்பர் நவீன் குமார், 26. நாடக கலைஞர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு சைக்கிளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகவும் பிடித்த விஷயம். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த இடமான பஞ்சாபில் உள்ள பங்கா கிராமத்திற்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தனர். இதற்காக கடந்த 25ம் தேதி இருவரும் தங்கள் சைக்கிளில் கொப்பாலில் இருந்து புறப்பட்டனர். மொத்தம் 2,500 கி.மீ., பயணிக்க வேண்டும்.
இதற்காக, 18 முதல் 20 நாட்கள் வரை ஆகும் என கணக்கிட்டனர். சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இப்பயணம் அமைந்ததாக பெருமிதம் கொண்டனர். ஏற்கனவே சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான ஒடிஷாவின் கட்டாக், காந்தி பிறந்த இடமான போர்பந்தருக்கு சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்களின் இப்பயணத்தில் குளிர், வெயில் என அனைத்தையும் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக சைக்கிள் ஓட்டுகின்றனர். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டுவதை தவிர்க்கின்றனர். விபத்துகள் ஏற்படாதவாறு நிதானமாக பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
இன்றைய காலத்தில் சைக்கிள் ஓட்டும் பழக்கம் குறைந்து விட்டது. சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இது குறித்து, அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே, சைக்கிள் பயணம் செல்கிறோம். தேசத்தை காத்த தலைவர்கள் பிறந்த இடங்களுக்கு நேரில் சென்று வழிபடுவது எங்களுக்கு பிடித்தமான விஷயம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -:.

