sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

 கபடி போட்டியில் கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த மங்களூரு மாணவி

/

 கபடி போட்டியில் கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த மங்களூரு மாணவி

 கபடி போட்டியில் கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த மங்களூரு மாணவி

 கபடி போட்டியில் கர்நாடகாவுக்கு பெருமை சேர்த்த மங்களூரு மாணவி


ADDED : டிச 19, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: கடந்த நவம்பரில்: கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு சூரத்கல்லின் இடியாவை சேர்ந்தவர்கள் நாராயண் பூஜாரி - சசிகலா தம்பதி. இவர்களின் மகள் தான் தனலட்சுமி பூஜாரி. இவர்களுக்கு இரு மகள்கள். இளைய மகள் தான் தனலட்சுமி பூஜாரி.

சிறு வயதில் இருந்தே தனலட்சுமி, கபடி விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். மகளின் விருப்பத்துக்கு பெற்றோருக்கும் ஊக்குவித்தனர். பள்ளி, மாவட்டம், மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்று , தன் திறமையை வெளிப்படுத்தினார்.

இதனால், தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் சாம்பியன்ஷிப் மற்றும் பெடரேஷன் கோப்பை போட்டிகளில், கர்நாடகா சார்பில், 12 முறை பங்கேற்றுள்ளார். கபடியில் ஆல் ரவுண்டராக செயல்படும் இவர், வீராங்கனையர் இடையே உள்ள இடைவெளியை பயன்படுத்தி, புள்ளிகளை எடுப்பதில் வல்லவர். அதேபோன்று, எதிரணி வீரர் இவரது அணி எல்லைக்குள் வந்து, இவரின் பிடியில் சிக்கினால், எதிரணி புள்ளியை இழப்பது உறுதி. இவரின் பிடி, அவ்வளவு வலுவானதாக இருக்கும்.

தேசிய ஜூனியர், சீனியர் பயிற்சி முகாமில் நான்கு முறை பங்கேற்றுள்ளார். இதுதவிர, அகில இந்திய பல்கலை கழகங்கள் இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில், மங்களூரு பல்கலை கழகம் சார்பில் விளையாடியுள்ளார்.

தனலட்சுமி விளையாட்டில் மட்டுமின்றி, கல்வியிலும் சிறந்து விளங்கினார். இவரின் திறமையை பார்த்த மூடபித்ரியில் உள்ள ஆல்வாஸ் கல்லுாரி, தங்கள் கல்லுாரியில் சேர்த்து கொண்டது. அங்கு இவருக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட்டது. இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் உட்பட பல டிப்ளமோ படிப்புகளை முடித்து உள்ளார்.

ஆல்வாஸ் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு கல்வி போதிப்பது மட்டுமின்றி, விளையாட்டிலும் அவர்களை ஊக்குவித்து வருகிறது. கபடியில் உயர்தர பயிற்சியும் அங்கு அளிக்கப்பட்டது. அதனால், கல்வியையும், விளையாட்டையும் சரிசமமாக கொண்டு சென்றார் தனலட்சுமி.

டாக்காவில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கர்நாடகாவை சேர்ந்த தனலட்சுமிக்கு, முதல்வர் சித்தராமையா ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து, அவரை கவுரவித்தார்.

19_Article_0001, 19_Article_0002

வங்கதேசம் டாக்காவில் நடந்த கபடி போட்டியில் தங்கப்பதக்கத்துடனும், (அடுத்த படம்) கோப்பையுடனும் தனலட்சுமி பூஜாரி.

வங்கதேசம் டாக்காவில் நடந்த கபடி போட்டியில் தங்கப்பதக்கத்துடன்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us