/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது; தந்தைக்கு வலை
/
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது; தந்தைக்கு வலை
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது; தந்தைக்கு வலை
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது; தந்தைக்கு வலை
ADDED : செப் 01, 2025 03:57 AM

சுப்பிரமணியநகர்: ஹோட்டலுக்கு அழைத்து சென்று, இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததுடன் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறிய, வாலிபர் கைது செய்யப்பட்டார். தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று, இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரின் தந்தை மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு சுப்பிரமணியநகரை சேர்ந்தவர், 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த, 2020ம் ஆண்டு நிரஞ்சன், 27 என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர்.
இளம்பெண் தினமும் எங்கு செல்கிறார் என்பதை அறிய அவரது ஸ்கூட்டரில், ஜி.பி.எஸ்., கருவியை நிரஞ்சன் பொருத்தினார். நான்கு ஆண்டுகளாக இளம்பெண்ணை பின்தொடர்ந்து சென்றார்.
தனது பைக்கில் நிரஞ்சன் ஜி.பி.எஸ்., பொருத்தியது பற்றி, கடந்த ஆண்டு இளம்பெண்ணிற்கு தெரிந்தது. கோபம் அடைந்தவர், போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலையம் வந்த நிரஞ்சன் மன்னிப்பு கேட்டதுடன், இனி இளம்பெண் பின் செல்ல மாட்டேன் என்றும் எழுதி கொடுத்தார்.
ஆனால், மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இளம்பெண்ணை பின்தொடர்ந்தார். ஸ்கூட்டரில் ஜி.பி.எஸ்., பொருத்தியதற்கு மன்னிப்பு கேட்டார். இதனால் இளம்பெண் சமாதானம் ஆனார்.
கடந்த பிப்ரவரி மாதம் இளம்பெண்ணை, ஹோட்டல் ஒன்றுக்கு நிரஞ்சன் அழைத்து சென்றார். அங்கு இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தார்.
அந்த வீடியோவை காட்டி, 'நான் அழைக்கும் போது எல்லாம் நீ வர வேண்டும்; இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன்' என்று மிரட்ட ஆரம்பித்தார். பயந்து போன இளம்பெண், யாரிடமும் சொல்லாமல் இருந்தார்.
இந்நிலையில், நிரஞ்சனின் மொபைல் போனில், இளம்பெண்ணின் ஆபாச வீடியோ இருப்பதை, நிரஞ்சன் தந்தை ராஜசேகர், 55 பார்த்து விட்டார். ஆனால் மகனுக்கு புத்திமதி கூறாமல், இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
'உனது ஆபாச வீடியோ, எனது மகனிடம் உள்ளது. என்னுடனும் நீ உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவேன்' என்று மிரட்டினார்.
இதனால் மனம் உடைந்த இளம்பெண், தந்தை, மகன் கொடுக்கும் டார்ச்சர் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார்.
பின், சுப்பிரமணியநகர் போலீசில் புகார் செய்தார். தந்தை, மகன் மீது வழக்குப் பதிவானது. நிரஞ்சன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ராஜசேகரை போலீஸ் தேடுகிறது.