sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடவள் அரங்கம்

/

அழகே ஆச்சரியப்படும் அழகி

/

அழகே ஆச்சரியப்படும் அழகி

அழகே ஆச்சரியப்படும் அழகி

அழகே ஆச்சரியப்படும் அழகி


ADDED : ஜூலை 14, 2025 05:51 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்தவர் வம்ஷி உதய். இவரை பற்றி பேசாத இடங்களே இல்லை என கூறினால் மிகையாகாது. மாநிலத்தில் அந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார். இதற்கு காரணம் அவரது திறமையும், அழகும் எனலாம்.

வம்ஷி அடிப்படையில் சிக்கமகளூரை சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூருக்கு குடிவந்து விட்டார். இவர் நினைத்த படி, வக்கீலுக்கு படித்து பட்டம் பெற்றார். இவர் தன் வாழ்க்கையில் ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால், அதிலிருந்து பின்வாங்கிய பேச்சுக்கே இடமில்லாமல் திகழ்ந்தார்.

-உடும்பு பிடி


பட்டம் பெற்ற பின், கர்நாடகாவின் சி.பி.ஐ., துறையில் 'இன்டன்ஷிப்' செய்தார். இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரியல் எஸ்டேட் சம்பந்தமான வழக்குகளை கவனித்து வந்தார். பிறகு, இரண்டு ஆண்டுகள் கார்ப்பரேட் சட்டங்களில் தீவிர பயிற்சி பெற்றார். இவருக்கு திடீரென பேஷன் டிசைனிங் மீது ஈர்ப்பு வந்து உள்ளது. அப்போது, பலரும் இது வேண்டாத வேலை என கூறி உள்ளனர்.

ஆனால், வம்ஷியோ பிடித்தால் உடும்பு பிடி என்பது போல, தான் எடுத்த முடிவில் தீர்க்கமாக இருந்தார். பிறகு, அவர் ஆசைப்பட்டதை போலவே மாடலிங் துறையில் நுழைந்தார்.

திருப்பு முனை


அச்சமயத்தில், இந்திய அழகி போட்டியில் கலந்து கொண்டார். இதில், 'டாப் 50' இடத்திற்குள் வந்தார். இது, அவரது வாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இந்த வெற்றி அவரின் வாழ்க்கையில் உந்து சக்தியாக மாறியது. இதையடுத்து, பல முன்னணி அழகி போட்டிகள், ஆங்கில காலண்டர்கள், அட்டைப் படங்களில் இடம் பிடித்தார். இவை வம்ஷியின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

நேற்று வரை வக்கீலாக இருந்து, இன்று முற்றிலும் வேறொரு துறையில் சாதிப்பது சாதாரண விஷயமா என்ன எண்ணி பெருமை அடைந்து உள்ளார். இந்த சமயத்தில் கர்நாடகாவில் 'மிஸ் யுனிவர்ஸ் கர்நாடகா 2025' அழகி போட்டி, நடப்பாண்டு மே மாதம் நடந்தது.

இதில், வம்ஷியும் பங்கேற்றார். இந்த போட்டி, பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் நடந்தது. போட்டியை காண ரசிகர்கள் அலைமோதினர்.

நடுவர்கள் நடுக்கம்


அனைத்து அழகிகளையும் ஒரே இடத்தில் பார்ப்பது காண கிடைக்காத அதிசயம் தானே. அந்த சமயத்தில் வம்ஷி மேடையில் அனைவர் முன்னிலையிலும் நடந்து வந்ததை பார்த்து, அனைவரும் மெய் சிலிர்த்தனர்; நடுவர்களே நடுங்கினர். அந்த அளவுக்கு அழகே ஆச்சரியப்படும் அழகியாக இருந்தார் என பார்வையாளர்கள் சிலர் கூறினர்.

அந்த போட்டியில் 'மிஸ் யுனிவர்ஸ் கர்நாடகா 2025' பட்டத்தை பெற்றார். இதன் மூலம் பட்டி, தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது அவருக்கு மேலும் விளம்பரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

மிஸ் இந்தியா?


இன்னும் சில நாட்களில், 'நெட்பிளிக்சில்' வர உள்ள வெப் சீரிஸ் மூலம் சினிமா உலகிலும் அறிமுகமாக உள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட்டில் நடக்கிற, 'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025' அழகி போட்டியில் பங்கேற்க உள்ளார். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்து உள்ளது.

அதுமட்டுமின்றி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவர், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளை சரளமாக பேசும் திறன் உடையவர். இதனால், எளிதில் மக்களிடம் உரையாட தவறுவதில்லை.

ஆகஸ்ட்டில் நடக்கும் தேசிய அளவிலான அழகி போட்டியில், 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us