sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

பிற மாநில தமிழர்

/

பிற மாநிலம்

/

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ அரபிக் கல்லூரி - 13வது பட்டமளிப்பு விழா

/

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ அரபிக் கல்லூரி - 13வது பட்டமளிப்பு விழா

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ அரபிக் கல்லூரி - 13வது பட்டமளிப்பு விழா

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ அரபிக் கல்லூரி - 13வது பட்டமளிப்பு விழா


மே 24, 2025

மே 24, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி மதரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அரபிக் கல்லூரியின் 13வது யாஸீனிய் பட்டமளிப்பு விழா, முதலாம் ஆண்டு புகாரி ஷரீஃப் ஸனது வழங்கும் விழா, மற்றும் புகாரி ஷரீஃப் அபூர்வ பிரார்த்தனை விழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த விழா, நபி (ஸல்) அவர்களின் 36வது தலைமுறை திருப்பேரர் அஷ்ஷைகு ஜமாலிய்யா சையது யாஸீன் அலி மவுலானா அல் ஹஸனி ஹூசைனிய்யுல் நாயகம் தலைமையில், பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.


விழாவில் மதரஸா பேராசிரியர்கள் சயீது முஹம்மது, அப்துல் ரஹ்மான், முஹம்மது ரபீஉத்தீன், ஷப்பீர் அலி, நூரே முஹம்மதிய்யா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹனபி கலீஃபா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். S.I. தவ்லத் (அவ்னிய்யா உலக அமைதி அறக்கட்டளை செயலர்) வரவேற்புரை ஆற்றினார். மூத்த உறுப்பினர் முஹம்மது முஸ்தஃபா நபி புகழ் பாடினார்.

ஆலிம் டாக்டர் எம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி,ஆலிம் ஏ. கே. ஏ. ஷர்புத்தீன் ஃபைஜி,முனைவர் எம். ஜே. முஹம்மது இக்பால், கே. கே. முஹம்மது முஹய்யத்தீன் ஆலிம் ஆமிரி ஆகியோர் சிறப்பு உரையாற்றினர்.


அஷ்ஷைகு யாஸீன் அலி மவுலானா நாயகம் யாஸீனிய் மற்றும் புகாரி பட்டங்களை பட்டதாரிகளுக்கு வழங்கியபோது, “இல்ம் (அறிவு) என்பது இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்நிலையில் 'ஆலிம்', 'உலாமா' என்பவர்கள் இறைவனை உணர்ந்த அறிஞர்கள். நபிமார்கள் உலமாக்கள் வாரிசுகள் என கூறப்படுவது உண்மையான அறிவுடன் கூடியது. உண்மையான அறிவு என்பது இறைவனை அறிதலாகும். அதற்கு தூய நெறியறிவு அவசியம்,” எனவும் , உண்மையான ஞானத்தில் இணைவைத்தலும் இல்லை , பிரிவும் இல்லை என கூறி அனைவரும் ஒற்றுமையுடன் , ஒழுங்குகளுடன் நபிகள் நாயகம் குடும்பத்தவர்கள் ௯றிய வகையில் குர்ஆன், நபிகள் வாழ்வு முறை அறிந்து வாழ வேண்டும், சமயங்களிடையே நல்லிணக்கமும் , அணைத்து மக்களிடமும் சாமாதனமும் வேண்டுமென எடுத்துரைத்தார்.

அரபிக் கல்லூரியில் 7 வருடம் பயின்று ஆலிம் பட்டம் பெறுபவர்கள், அதே நேரத்தில் பல்கலைக்கழகங்களில் பொறியியல், வணிகம், வரலாறு உள்ளிட்ட துறைகளிலும் பட்டதாரிகளாக மிளிர்வது இந்த கல்லூரியின் குறிப்பிடத்தக்க விஷயம் என்றார்கள். இத்தகைய வளர்ச்சி, அவர்களது பாட்டனார் ஜமாலிய்யா சையது கலீல் அவ்ன் மவுலானா அல்ஹஸனி ஹூசைனிய்யுல் ஹாஷிமிய் நாயகத்தின் தொலைநோக்கு பார்வையின் விளைவாகும் , வருங்காலத்தில் பல்கலைகழகமாக மிளிரும் என யாஸீன் அலி நாயகம் தெரிவித்தார்.


மொத்தம் 28 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மது ஹஸன், கலீலுர் ரஹ்மான இருந்தனர் . நன்றி உரை கவிஞர் நைனார் முஹம்மது அன்சாரி நவில அரபிக் கல்லூரி பேராசிரியர்கள், திருச்சி மூத்த உறுப்பினர் சிராஜூதீன், அப்பாஸ் ஷாஜஹான், ஆலிம் பெருமக்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் மதிய உணவு உபசரிக்கபட்டது

- தினமலர் வாசகர் அபூ மாஹிர்









      Dinamalar
      Follow us