தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய கருத்தரங்கு

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய கருத்தரங்கு

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய கருத்தரங்கு


அக் 14, 2026

Follow on GoogleFavourite on Google

அக் 14, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய கருத்தரங்கு
மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் தலைமையுரையைத் தொடர்ந்து நடிகர் திலகத்திற்கு பாரத்ரத்னா விருது வழங்குவதற்காக மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்தரங்கத் தலைவர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி நிகழ்வினை சிறப்பாக நடத்தி வைத்தார்.
மன்றத்தின் நிர்வாகக் குழுச் செயலாளர் ஜி.வி.பரமசிவம் வரவேற்றார். மன்றக் கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ் நரசிம்மன் இசையமைப்பாளர் ஆர்.டி.ராஜன், துணை ஒருங்கிணைப்பாளர் இசையமுது வாணிஸ்ரீ வேணுகோபால் ஆகியோர் பாடல்களை வழங்கினர்.
நிகழ்வு பற்றிய பாராட்டுரையை மும்பைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவரும் மன்றத்தின் வாழ்நாள் உறுப்பினருமான முருகன் ராஜன் வழங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி ஆறு உரையாளர்களும் சிறப்பாக தத்தம் உரைகளை வழங்கினார்கள்.
சிவாஜியின் தமிழ் உச்சரிப்பு பற்றி புவனா வெங்கட், சமூகக் கதைகள் பற்றி பிரவிணா சேகர்( நிர்வாகக்குழுச் செயலாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம்மருத்துவத்துறை, மும்பை),
நகைச்சுவை உணர்வு பறறி C.S.கி.வேங்கடராமன் (கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம்),
நாட்டுப்பற்றின் வெளிப்பாடு பற்றி அ.சமாரியா (கலைப்பிரிவு, தமிழ் எழுத்தாளர் மன்றம்)
புராணக் கதைகளுக்கு உயிரூட்டல் பற்றி பாண்டித்துரை (நிர்வாகக்குழுச் செயலாளர், தமிழ் எழுத்தாளர் மன்றம்தொழிலதிபர், புனே)
படப்பிடிப்பில் நேரம் தவறாமை பற்றி செல்வி ராஜ் (கருத்துரைஞர், தமிழ் எழுத்தாளர் மன்றம் மேனாள் செயலாளர், கார்கர் தமிழ்ச்சங்கம், மும்பை) பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us